.

Pages

Thursday, July 19, 2018

புனித மதினாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு பாதுகாப்பாகச் செல்ல 4 புதிய சுரங்கப்பாதைகள் திறப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 19
புனித மதினாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிக்கு பாதுகாப்பாகச் செல்ல 4 புதிய சுரங்கவழிகள் திறக்கப்பட்டன

புனித மதினா மாநகரில் அமைந்துள்ள நபியின் பள்ளி என அழைக்கப்படும் மஸ்ஜிதுன்னபவி பள்ளிக்கு தொழுகையாளிகளும், இன்னபிற வணக்கசாலிகளும் வாகனங்கள் நிறைந்த சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்ததை கருத்திற்கொண்டு புனித மதினா மேம்பாட்டு ஆணையத்தினால் 4 புதிய சுரங்கவழிப் பாதைகள் கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டன.

125 மீட்டர் நீளமுள்ள சுரங்கவழிப்பாதை எண்கள்: 2 மற்றும் 3ல் வழமையான மாடிப்படிகளுடன் கூடுதலாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைவரும் பயன்படுத்திடும் வகையில் 12 நகரும் படிக்கட்டுக்கள் (எஸ்கலேட்டர்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சுரங்க வழிப்பாதைகள் நவீன ஏசி, மின்விசிறி, தீ பாதுகாப்பு சாதனங்கள், மின்விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள், சிசிடிவி கேமிராக்கள் என சகல வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் திறக்கப்பட்டுள்ளது. அல் ஸலாம் டனல் மஸ்ஜிதுன்னபவிக்கு தென்மேற்கு பகுதியிலும், அவாலி டனல் தென்கிழக்கு பகுதியிலும் அமைந்துள்ளன. மதினா நகரின் மத்திய பகுதியின் வடபுறத்திலிருந்து வருவோர் வாகனங்கள் நிரம்பிய ரோட்டை கடக்க இனி திணற வேண்டியதில்லை.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.