தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.
இரு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மாற்றுத்திறனாளி பணியாளர்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என 2008 ஆம் ஆண்டு அரசாணை எண் 151-இல் இருந்தும், இதுவரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பருவகால மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
எனவே, அரசாணைப்படி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் ஏ. பஹாத்அகமது தலைமை வகித்தார். தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் என். சக்திவேல், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.