![]() |
செட்டியா குளம் முகப்புத் தோற்றம் || கோப்புப்படம் |
அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை சார்பில், செட்டியா குளத்துக்கு ஆற்று நீரை நிரப்புவதற்கு பாதை அமைக்கக் கோரி பேரூராட்சிகள் இணை இயக்குனரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் குளத்தின் புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது.
மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கல்லணையை வந்தடையும். பின்னர், கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதையடுத்து, கடைமடை பகுதிகளுக்கு முறை வைத்து தண்ணீர் வழங்கப்படும். இதன் உபரி நீர், சி.எம்.பி வாய்க்கால் வழியாக வந்து விவசாயத்திற்கும், குளங்களுக்கும் பயன்படுத்தப்படும். இக்குளத்திற்கு ஆற்றின் உபரி நீர் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை சார்பில், செட்டியா குளத்துக்கு ஆற்று நீரை நிரப்புவதற்கு பாதை அமைக்கக் கோரி, அதன் நிர்வாகிகள், சென்னை குறளகத்தில் பேரூராட்சிகள் இணை இயக்குநர் ஆலின் சுலேஜா அவர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.