அதிரை நியூஸ்: ஜூலை 16
ஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞர் தன்னார்வலராக மாறி புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபாடு
ஜப்பானுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கு புகைப்படக்கலை பயிற்சிக்காகவும், அந்நாட்டின் கலை கலாச்சாரப் பண்பாடுகள் மற்றும் ஜப்பானின் அழகியலை படம்பிடிக்கவும் சென்றிருந்தார் சவுதியை சேர்ந்த இளைஞர் ஜாஸிம் அல் முல்லா என்கிற சவுதி இளைஞர் ஒருவர் ஆனால் ஜப்பானில் வீசிய புயல் மற்றும் மழை வெள்ளத்தால் ஹிரோஷிமாவுக்கு அவரால் செல்ல இயலவில்லை.
அமெரிக்காவில் அவருடன் பயிற்சிகளை மேற்கொண்ட பல நண்பர்கள் புகுயாமா (Fukuyama) என்ற நகரில் இருப்பதால் அங்கு சென்றார் ஆனால் அங்கிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் ஜப்பானில் வீசிய புயல் மழையால் சுமார் 135 பேர் மரணித்தும் சுமார் 130 பேர் காணாமல் போயுமுள்ள செய்தியை அறிந்து தான் வந்த நோக்கம் அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்திடம் தன் பெயரையும் பதிவு செய்து கொண்டு தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து மக்களையும் அவர்களின் பொருட்களையும் மீட்கும் பணியில் இறங்கினார்.
ஜப்பானிய ராணுவத்துடன் இணைந்து தினமும் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை காயம்பட்ட மக்களை மீட்டும், நடக்க இயலாத நிலையிலுள்ள முதிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றும், வீட்டுச் சாமான்களை மீட்டும், வீடுகளில் சுமார் 2 மீட்டர் வரை உறைந்து போயுள்ள சேறுகளை சுத்தப்படுத்தியும் உதவி வருகின்றார்.
மீட்புப்பணியில் ஜப்பானியர் அல்லாத ஒருவர் ஈடுபட்டுள்ளதை அந்நாட்டு மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கும் போது 'உதவி தேவைப்படும் நிலையிலுள்ள எந்த நாட்டு மக்களுக்கும் உதவ வேண்டும்' என்ற தன்னுடைய சவுதி (இஸ்லாமிய) விழுமியங்களை கற்றுத் தந்துள்ளதை தனது ஜப்பானிய நண்பர்கள் மூலம் அம்மக்களுக்கு உணர்த்துகின்றார். ஜப்பானிய தன்னார்வக் குழுக்களும் தன்னுடைய சேவையை ஏற்று நன்றி பாராட்டுவதாகவும் தெரிவிக்கின்றார் ஜாஸிம் அல் முல்லா.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.