தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை கால்வாய் பாசனத்திறகு கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல தஞ்சாவூர் நகரிலிருந்து கல்லணை கால்வாய் வரை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்லணை கால்வாய் கரையோரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (25.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
கல்லணையிலிருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைவதை உறுதி செய்திடவும், கல்லணையில் முழு கொள்ளளவு தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்படுவதால் கரை இருபுறங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் நகரிலிருந்து கல்லணை வரை சுமார் 40 கிலோ மீட்டர் தூர அளவிற்கு பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை அலுவலர்களுடன் நேரில் சென்று கல்லணை கால்வாயில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது கல்லணைக்கு 30000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கல்லணையிலிருந்து காவிரியில் 9500 கனஅடியும், வெண்ணாற்றில் 9500 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 7600 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2900 கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆங்காங்கே நீர் சுழற்சி உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியின் கரைகளை பலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நாளை முதல் கல்லணை கால்வாயில் முழு நீர் கொள்ளளவை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஆற்றில் வரும் தண்ணீரில் குளிக்கவோ, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம். பொது மக்களும், சுற்றுலாபயணிகளும் பாதுகாப்பாக பார்வையிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வேளாண் துணை இயக்குநர் ஜஸ்டின், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.