அதிரை நியூஸ்: ஜூலை 18
எதிர்வரும் ஹஜ் யாத்திரையின் போது உலகெங்கிலுமிருந்து வரும் பல்வேறு இனம் மற்றும் பன்னாட்டு மக்களான அல்லாஹ்வின் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்காகவும், அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்காகவும், அவர்கள் தங்களின் புனிதக் கடமையினை எளிதாகவும், மனநிறைவாகவும் நிறைவேற்றிட இரு புனிதப்பள்ளிகளின் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை நடப்பு துல்காயிதா மாதம் முதல் துல்ஹஜ் இறுதி வரை 2 மாதங்களுக்கு தேவையான பணிகளை திட்டமிட்டு செய்து வருவதாக அதன் நிர்வாகத் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதைசி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பிடத்தக்க சில முன்னேற்பாடுகளான மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்களை கொண்டு கருத்தரங்கம் மற்றும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல், குர்ஆன் விநியோகம் மற்றும் மார்க்க விளக்க நோட்டீஸ்களை வழங்குதல், வெள்ளிக்கிழமை ஜூம்ஆ உரைகளை 10 சர்வதேச மொழிகளில் மொழிபெயர்த்து தருதல், புனித மதினாவிலுள்ள மஸ்துன்னபவிக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றுடன்,
புனித மக்காவின் புனிதப்பள்ளியின் 210 நுழைவாயில்கள் அவற்றில் 38 நுழைவாயில்கள் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகவும், 7 நுழைவாயில்கள் பெண்களுக்காகவும், 7 நடைபாலங்களும், 1 வாயில் மரணித்த ஜனாஸாக்களை கொண்டு வருவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. 25,000 ஜம்ஜம் நீர் கண்டைனர்கள் மக்காவிலும் 23,000 ஜம்ஜம் கண்டைனர்கள் மதினாவிலும் உள்ளன. மஸ்ஜிதுன்னபவியின் 100 நுழைவாயில்களும், 4 நகரும் படிக்கட்டுகளும் தொடர் பராமரிப்பின் கீழ் தயார் நிலையில் உள்ளன.
காது கேளாத, வாய்ப்பேச இயலாதவர்களுக்கு சைகை மொழிகளில் மார்க்க விளக்கங்களை எடுத்துச் சொல்லவும் அறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு கோல்ப் வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நுழைவாயில்களின் வழியாக உள்நுழைவதும் வெளியேறுவதும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. புனித கஃபாவை தவாப் சுற்றுவோரின் எண்ணிக்கை தற்போது மணிக்கு சுமார் 107,000 பேர் என்ற அளவை எட்டியுள்ளது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இருபுனிதப் பள்ளிகளின் தரைதளங்கள், அடிமட்டப் பகுதிகளில் புதிய ஏசிக்களும், திறந்த வெளிப்பகுதிகளில் பல்லாயிரம் புதிய பேன்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இரு புனிதப்பள்ளிகளிலும் 8,441 நவீன டாய்லெட்டுகள், 6,000 ஒழுச் செய்யுமிடங்களும் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் ஹஜ் கிரிகைகளை பற்றி விளக்கம் கூறும் வகையில் பல்வேறு இடங்களில் டிவிக்கள், ஆடியோ ஒளிபரப்புக்கள், விளக்கப்படங்கள் ஆகியன ஒளிபரப்பாகி வருகின்றன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.