அதிரை நியூஸ்: ஜூலை 18
மக்கா புனிதப்பள்ளியில் நடைபெற்ற கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 பேர்களின் விடுதலை ரத்து
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மக்காவின் புனிதப்பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கிரேன் ஒன்று விழுந்ததில் சுமார் 110 பலியானதுடன் சுமார் 209 பேர் காயமடைந்தனர். இந்த கிரேன் சவுதி பின்லேடன் எனும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதுடன் அந்நிறுவனத்தாலேயே இயக்கப்பட்டும் வந்தது.
இந்நிலையில் சவுதியின் உச்சநீதி மன்றத்தில் அட்டார்னி ஜெனரலின் எதிர்வாதத்தினை தொடர்ந்து முந்தைய தீர்ப்புக்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு நீதிமன்றத்தால் (Summary Court) விடுவிக்கப்பட்ட 13 பேர் மீதான வழக்கு மீண்டும் புதிதாக ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்படவுள்ளது.
இதற்கு முன் அப்பீல் கோர்ட் வெளியிட்ட தீர்ப்பில், இந்த துயர விபத்து இயற்கையின் சீற்றத்தால் நடைபெற்றது என்பதுடன் அதுவோர் வேலை விடுமுறை நாளில் நடைபெற்றது. மேலும் பின்லேடன் கம்பெனியின் நிர்வாகத் தவறுகளோ அல்லது ஊழியர்களின் தவறுகளோ ஏதுமில்லாததால் உயிரிழந்தவர்களுக்கும், காயம்பட்டவர்களுக்கும் நஷ்டஈடு தரத்தேவையில்லை என்ற தீர்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அட்டார்னி ஜெனரல் வைத்துள்ள வாதங்களில் முக்கிய புள்ளிகள் வருமாறு,
1. பிரதிவாதிகள் வைத்துள்ள வாதங்களில் பல்வேறு பலவீனங்கள் உள்ளதால் ஏற்க இயலாது.
2. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
3. கிரேனை நிறுத்தி வைத்திருந்த முறை சரியானதல்ல.
4. ஊழியர்களும் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கைகொள்ளவில்லை.
5. வானிலை மையத்தின் எச்சரிக்கையை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.
6. அந்த சைட்டில் வேலை செய்த 3,300 பின்லேடன் நிறுவனத்தின் ஒரு ஊழியர் கூட அந்த சம்பவ இடத்திலேயே இல்லை.
என வாதிட்டதால் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் புதிதாக விசாரிக்கப்படவுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.