.

Pages

Wednesday, July 25, 2018

உஷார்! அபுதாபியில் எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் கூடுதல் கருணை வேகம் ரத்து!

அதிரை நியூஸ்: ஜூலை 25
அமீரகத்தில் பொதுவாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்ட இடத்தில் கருணை வேகத்துடன் மணிக்கு 100 கி.மீ வரை செல்லலாம். அதேபோல் 100 என்கிற இடத்தில் 120, 140 என்கிற இடத்தில் 160 கி.மீ வேகம் வரையும் செல்லலாம் என்ற அனுமதியுள்ளது.

இந்த சிறப்பு கருணை வேக அனுமதி ஆரம்பமாக அபுதாபி எமிரேட்டில் மட்டும் எதிர்வரும் 2018 ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. இனி எந்த வேகத்தில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதோ அதற்கு மேல் ஒரேயொரு கி.மீ கூடுதலான வேகத்தில் சென்றாலும் போக்குவரத்து ரேடார் கேமிராவில் சிக்கி அபராதம் கட்டண நேரிடும். இந்த புதிய வேகக்பட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு கேமிராக்கள் சரிசெய்யப்பட்டு வருவதாக அபுதாபி போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.

எனவே, அபுதாபி எமிரேட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனம் ஓட்டுவோர் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்ல வேண்டாம். மணிக்கு 80 கி.மீ ஆக இருந்தால் 80, 100 ஆக இருந்தால் 100, 120 ஆகா இருந்தால் 120, 140 ஆக இருந்தால் 140 என்ற அனுமதிக்கப்பட்ட வேகக்கட்டுப்பாட்டிற்குள்ளேயே வாகனத்தை செலுத்தவும்.

Abu Dhabi Police GHQ announced on Wednesday that it had begun procedures to eliminate speed leeways on roads in the Emirate of Abu Dhabi. Starting 12th August, Abu Dhabi roads' speed limits will be modified along with speed radars to a set standard.

Al Rumaithi said that the setting of the new speed limits and the cancellation of the 20km/h speed leeway came as a result of studies carried out by a specialist team at Abu Dhabi Police GHQ.

The Abu Dhabi Police Commander-in-Chief called on all drivers to adhere to the new traffic regulations.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.