அதிரை நியூஸ்: ஜூலை 18
ஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 30,000 திர்ஹம் நஷ்டஈடு தர அமீரக நீதிமன்றம் உத்தரவு.
அபுதாபியிலிருந்து ஒருமுறை கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு சென்றபோது விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பேக்கேஜை தொலைத்தது ஒரு ஏர்லைன்ஸ். பின்பு அதே ஏர்லைன்ஸின் வேறொரு விமானத்தில் ஒரு அரபு நாட்டிலுள்ள பல்கலைகழகம் ஒன்றில் சேருவதற்காக சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்றவற்றுடன் சென்றபோதும் லக்கேஜை இரண்டாம் முறையாக தொலைத்தது ஏர்லைன்ஸ், இதனால் அவரால் அந்த வருடக் கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தில் சேர இயலாததுடன் நகல் சான்றிதழ்களை பெறுவதற்காக பல்வேறு இழப்புக்களை சந்திக்க வேண்டியிருந்தது.
இரண்டு முறை ஒரே ஏர்லைன்ஸில் பேக்கேஜ்களை இழந்த அந்தப் பயணி தான் சந்தித்த பொருளாதார, தார்மீக, நெறிமுறை சேதாரங்கள் மற்றும் மன உளச்சலுக்கு பொறுப்பேற்று 1 லட்சம் திர்ஹம் நஷ்டஈடு கேட்டு அபுதாபி நீதிமன்றத்தை அணுகினார்.
குறிப்பிட்ட அந்த ஏர்லைன்ஸ் 'மான்ட்ரியல் கன்வென்ஷன்' எனும் சர்வதேச ஒப்பந்தப்படி செக்டு-இன் பேக்கேஜ்களில் பணத்தையோ, தங்க நகைகளையோ, அலுவல்ரீதியான சான்றிதழ்களையோ, நிதி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களையோ வைக்கக்கூடாது என்ற சட்டத்தை பயணி மீறியுள்ளதால் நஷ்டஈடு தர வேண்டியதில்லை என வாதிட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பயணி சென்ற இரண்டு நாடுகளும் 'மான்ட்ரியல் கன்வென்ஷன்' எனும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதவை என்பதால் ஏர்லைன்ஸின் இந்த வாதம் செல்லாது என்பதால் பயணி சந்தித்த பொருளாதார இழப்புக்கள், மனரீதி மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்கள் போன்ற தார்மீக சேதாரங்களை கருத்திற்கொண்டு 30,000 திர்ஹங்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஏர்லைன்ஸின் பெயர், பயணியின் விபரங்கள், பயணி சென்று வந்த நாடுகள் பற்றிய குறிப்புக்கள் என எதையும் வெளியிடவில்லை. குற்றம் மற்றும் அதன் மீதான தீர்ப்பு என அதன் முக்கிய அம்சங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.