.

Pages

Tuesday, July 17, 2018

அபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் சொந்த ஊருக்கு தவறுதலாக மாற்றி அனுப்பி வைப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 17
அபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் தவறுதலாக சொந்த ஊருக்கு மாற்றி அனுப்பப்பட்டது.

அபுதாபியின் ருவைஸ் பகுதியில் நிதின் ஓதயத் கொட்டாரன் என்ற கேரளக்காரர் கடந்த  ஜூலை 5 ஆம் தேதி இறந்தார் அதன்பின் 2 நாட்கள் கழித்து கிருஷ்ணன் காமாட்சி என்ற தமிழக வாலிபர் ஒருவரும் இறந்தார். இருவரது உடல்களும் அபுதாபி மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்தது.

நிதினின் பிரேத பரிசோதனை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் கேரளத்தின் காலிகட் (கோழிக்கோடு) அனுப்பப்பட்டது. அங்கு சவப்பெட்டியை பிரித்துப் பார்த்த உறவினர்கள் நிதின் உடலுக்குப் பதிலாக வேறொருவர் உடல் இருந்தததை கண்டு அதிர்ந்தனர். அந்த உடல் தமிழரான கிருஷ்ணன் காமாட்சி என்பவரதாகும். உடலை பதப்படுத்திய மார்ச்சுவரி ஊழியர்கள் தவறுதலாக மாற்றி அனுப்பியுள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தவறுதலாக கேரள சென்ற தமிழர் கிருஷ்ணன் காமாட்சியின் உடல் கேரள மாநிலம் வயனாடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இப்போது நிதின் உடல் கேரளா சென்ற பிறகு தான் கிருஷ்ணனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமாம். கிருஷ்ணனின் உறவினர்கள் கேரளா வந்து உடலை பெற்றுச் செல்ல வேண்டுமாம். ஊழியர்களின் கவனக்குறைவு இறுதிக்காரியங்களை செய்ய இயலாதவாறு சோகம் நிறைந்த 2 குடும்பங்களை அல்லாடவிட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.