.

Pages

Tuesday, July 24, 2018

சவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18 வரை நீட்டிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 24
சவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18 வரை பெறப்படும் என ஹஜ் அமைச்சர் மீண்டும் உறுதி

ஹஜ் அமைச்சகத்தின் ஈ-போர்ட்டல் வழியாக உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களிடமிருந்து விண்ணப்பம் பெறுவது எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தொடரும் என்றும் இது சம்பந்தமாக வதந்தி பரப்புவோர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சர் முஹமது சலேஹ் பென்தன் அவர்கள் தெரிவித்தார்.

உள்நாட்டு தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் வசம் அவர்களுக்கான இடங்களை மினாவில் குடிகள் அமைக்க ஓதுக்கியதுடன் அமைக்கப்பட்ட குடில்களுக்கான அங்கீகாரத்தை ஹஜ் அமைச்சகத்திடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

இதுவரை சுமார் 216,000 பட்ஜெட் மற்றும் வசதி கூடுதல்கள் உடைய இடங்கள் உள்நாட்டு சேவையில் இன்னும் நிரம்பாமல் உள்ளன. முன்பதிவு, கட்டணம் கட்டுதல் மற்றும் ஹஜ் பெர்மிட்டுகள் வழங்குதல் ஆகியவை ஈ-போர்ட்டல் எனும் ஆன்லைன் வழியாக உடனுக்குடன் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மதினா சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் சராசரியாக 85 முதல் 90 வரையிலான விமானங்கள் ஹஜ் யாத்ரீகர்களை சுமந்து வருகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.