.

Pages

Thursday, July 19, 2018

துபை ஷேக் ஜாயித் ரோட்டில் மேலும் ஒரு சாலிக் டோல்கேட்!

அதிரை நியூஸ்: ஜூலை 19
துபையில் ஏற்கனவே 6 சாலிக் டோல்கேட்டுகள் இருக்கும் நிலையில் 7வது சாலிக் டோல்கேட்டை பொருத்தும் பணிகள் அபுதாபி நோக்கிச் செல்லும் ஷேக் ஜாயித் சாலையில் இப்னு பதூதா மாலை தாண்டிய சிறிது தூரத்திலேயே அமைக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த டோல்கேட் அபுதாபி நோக்கிச் செல்லும் சாலையில் மட்டுமே உள்ளதேயன்றி அபுதாபியிலிருந்து வரும் சாலையில் இல்லை.

இந்த சாலிக் டோல்கேட் எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என இன்று துபை போக்குவரத்து துறையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஷேக் முஹமது பின் ஜாயித் சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் அல் யலாயீஸ் ஸ்ட்ரீட் மேம்பாலப் பணிகள் பூர்த்தியானவுடன் இந்த டோல்கேட் திறக்கப்படும்.

துபையில் சாலிக் டோல்கேட்டுகள் மூலம் ஆண்டுக்கு 12 பில்லியன் திர்ஹம் வருமானம் வரக்கூடிய நிலையில் இந்த புதிய சாலிக் டோல் மூலம் மேலும் 300 மில்லியன் திர்ஹம் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானங்களில் பெரும்பாலானவை துபை போக்குவரத்து துறையால் துபை சாலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய டோல்கேட் திறக்கப்படுவதால் ஷேக் ஸூஹைபிலிருந்து அபுதாபியின் சுவைஹான் ரோடு இன்டர்சேஞ்ச் வரை 62 கி.மீ தூரத்திற்கு போடப்பட்டுள்ள ஷேக் முஹமது பின் மக்தூம் எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய இணை விரைவு சாலையின் பக்கம் வாகன ஓட்டிகள் தங்களின் கவனத்தை திருப்புவார்கள் என்பதால் மிகவும் பிஸியான ஷேக் ஜாயித் ரோட்டில் வாகன நெரிசல் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையில் மணிக்கு 8,000 வாகனங்கள் கடந்த செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் மாறும் துபை மெட்ரோ நிலையங்கள்:
துபை மெட்ரோ நிலையங்களின் பல பெயர்கள் தனூப், நூர் பேங்க், யூஏஈ எக்ஸ்சேஞ்ச், ஏடிசிபி, பர்ஜூமான் என்பன போன்ற பல தனியார் நிறுவனங்களின் பெயர்களை கொண்டுள்ளன. இவ்வாறு மெட்ரோ நிலையங்களுக்கு பெயர் சூட்டி அழைக்கும் ஒப்பந்தங்கள் 10 வருடங்களுக்கு செய்யப்பட்டிருந்தன. இந்த ஒப்பந்தங்கள் எதிர்வரும் 2019 செப்டம்பருடன் காலாவதியாக உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் அவை புதிய தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு துபை மெட்ரோ நிலையங்கள் புதிய பெயர்களுக்கு மாறும்.

கடந்த 10 ஆண்டுகளில் துபை மெட்ரோ நிலையங்களுக்கு தனியார் நிறுவனப் பெயர்களை சூட்டியது மற்றும் மெட்ரோ நிலையங்களில் விளம்பரங்கள் செய்ய அனுமதித்த வகையில் 4.8 பில்லியன் திர்ஹங்களை துபை போக்குவரத்துத் துறை வருமானமான ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times / Msn / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.