.

Pages

Tuesday, July 24, 2018

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

பேராவூரணி ஜூலை.24
பேராவூரணி நகர் பட்டுக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சியை கைவிடக்கோரி, பேராவூரணி அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை மாலை டாஸ்மாக் மதுக்கடை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச்செயலாளர் ச.அப்துல்சலாம் தலைமை வகித்தார். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளருமான ஆறு.நீலகண்டன் முன்னிலை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், திமுக ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையன், ஜனநாயக மாதர்சங்க மாவட்ட தலைவர் ஆர்.கலைச்செல்வி, அ.ம.மு.க ஒன்றியச்செயலாளர் ஆசைத்தம்பி, சிபிஐ ஒன்றியச்செயலாளர் கோ.பன்னீர்செல்வம், மதிமுக சேது ஒன்றியச்செயலாளர் வ.பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளர் அ.சேக் இப்றாகீம், சமூக ஆர்வலர் இ.வீ.காந்தி, நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திலீபன், திராவிடர் விடுதலைக்கழகம் மாவட்ட பொறுப்பாளர் சித.திருவேங்கடம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திமுக நகரச்செயலாளர் தனம் கோ.நீலகண்டன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ.பழனிவேலு, த.ம.பு.க.கே.வி.முனியன், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ், மகளிர் சங்கம் க.இராசாமணி, இந்திய ஜனநாயக மாதர்சங்கம் இந்துமதி, த.ம.பு.க இரா.மதியழகன், க.செய்சங்கர், கா.மதியழகன், சிபிஐ மு.சித்திரவேலு, தா.கலைச்செல்வன், சுப.செயச்சந்திரன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேராவூரணி நகர்ப்பகுதி பட்டுக்கோட்டை சாலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முயற்சியை கைவிடவேண்டும். நகரப்பகுதிக்குள் மதுக்கடை அமைக்கக்கூடாது. பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்க முயன்றால், பொதுமக்களைத் திரட்டி  சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில், "குடியேறும் போராட்டம்" நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.