.

Pages

Sunday, July 22, 2018

துபையில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசென்ஸ்!

அதிரை நியூஸ்: ஜூலை 22
துபையில் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் 'முலுக்கியா' (Mulukiya) எனப்படும் பிளாஸ்டிக் அட்டை லைசென்ஸ் தரப்படாது. இனி அனைத்து வாகனங்களின் லைசென்ஸூம் 'ஆயுட்கால லைசென்ஸாக' ((Life Time License) கருதப்படும். ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்கள் வழமைபோல் வாகனப் பரிசோதனையை முடித்து இன்ஷூரன்ஸை புதுப்பித்துவிட்டால் உங்களுடைய வாகன லைசென்ஸ் ஆட்டோமெட்டிக்காக ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுவிடும்.

புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸ் அட்டையின் காப்பி உங்கள் ஈமெயில்களுக்கு அனுப்பப்படுவதுடன் துபையில் RTA Dubai App, Dubai Drive App ஆகிய ஆப்பிலும் அல்லது website www.rta.ae என்ற இணைய தளத்திற்குள்ளும் எப்போதும் காணக் கிடைக்கும் அல்லது தொலைபேசியில் அழைத்தும் தெரிந்து கொள்ளலாம் call centre (8009090) .

இந்த விர்ச்சுவல் லைசென்ஸ் (Virtual License) அமீரகத்திலும், பிற சர்வதேச நாடுகளிலும் துபை லைசென்ஸாக ஏற்றுக் கொள்ளப்படும். இந்த விர்ச்சுவல் லைசென்ஸ்களில் வாகன அனுமதி காலாவதியாகும் நாள் பற்றிய குறிப்பும் இடம்பெறாது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு வாகனங்களும், வாடகைக்கு இயங்கும் வாகனங்களும் (Rent a car), டேக்ஸிக்களும் முதற்கட்டமாக முலுக்கியா இல்லா திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக கடந்த மே மாதம் முதல் துபையில் இயங்கும் தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. இறுதி மற்றும் மூன்றாம் கட்டமாக அனைத்து தனிநபர் வாகனங்களும் ஆகஸ்ட் 1 முதல் கொண்டு வரப்படவுள்ளது.

இந்தத் திட்டம் துபை எமிரேட்டில் மட்டுமே ஆரம்பமாக செயல்படுத்தப்படுகிறது. அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவில் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.