.

Pages

Friday, July 20, 2018

20 மைல் தூரம் வேலைக்கு நடந்து வந்த ஊழியர் ~ கடமையைப் பாராட்டி காரை பரிசளித்த முதலாளி (வீடியோ)

அதிரை நியூஸ்: ஜூலை 20
அமெரிக்காவின்  பெல்காம் (Pelham)  எனும் நகரிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான் 20 வயது இளைஞர் வால்டர் கார் (Walter Carr). அலபாமாவிலிருந்து (Alabama) எனும் அருகாமை நகரிலிருந்து பெல்காமுக்குச் செல்ல வேண்டும் அடுத்த நாள் தான் வேலைக்கு சேர்ந்துள்ள புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்ற நிலையில் வால்டர் காரின் கார் பழுதானது மேலும் அலபாமாவுக்குச் செல்ல மாற்றுத்தோது ஏதும் தென்படாத நிலையில் இரவோடு இரவாக நடக்கத் துவங்கினார்.

வழியில் சோதனைக்காக இடைமறித்த போலீஸ்காரர் ஒருவர் வால்டரின் நோக்கத்தை அறிந்து நெகிழ்ந்து அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் சிறிது உணவருந்தவும் உதவினார். பின்பு அலபாமா செல்லும் வழியில் சிறிது தூரம் வரை வந்து இறக்கிவிட்டார்.

தன் நடையை தொடர்ந்த வால்டர் காரை இன்னொரு போலீஸ்காரர் வழிமறித்து தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டார். இந்த போலீஸூக்கு தகவல் தந்து உதவச் சொன்னது முதலில் உதவிய போலீஸ். வால்டர் காரின் வேலை ஜென்னி ஹைடன் லாமி (Jenny Hayden Lamey) என்ற பெண்மணியின் வீட்டுப் பொருட்களை ஷிப்ட் செய்து தருவதே முதல் நாள் வேலை என்றாலும் போலீஸாரின் உதவியுடன் அந்த வீட்டை 6.30 மணிக்கெல்லாம் சென்றடைந்தார்.

வீட்டுக்கார பெண்மணி அவருடைய கம்பெனியின் சக வேலையாட்கள் வரும் வரை வால்டரை ஒய்வெடுக்கும்படி கேட்டுக் கொண்டார் ஆனால் ஓய்வெடுக்காத வால்டர் உடனடியாக பொருட்களை பேக்கிங் செய்யும் வேலையை துவங்கிவிட்டார். இந்த அரிய செய்தியை ஜென்னி தனது பேஸ்புக் பக்கத்தில் ஆச்சரியத்துடன் பதிவிட்டார்.

வால்டர் கார் காரில்லாமல் சுமார் 20 மைல்கள் (32 கி.மீ) நடந்து வந்தது, வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்தது என தன்னுடைய  வேலையில் நேர்மையாக நடந்து கொண்டது என்ற அனைத்தையும் அறிய வந்த அவருடைய முதலாளி மார்க்லின் (Marklin) தன்னுடைய போர்டு எஸ்கேப் மாடல் (Ford Escape) காரையே பரிசாக அளித்து உண்மையான, நேர்மையான உழைப்பாளியை கவுரப்படுத்தினார்.



Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.