.

Pages

Thursday, July 19, 2018

சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் எமிரேட்ஸ், எதிஹாத் இடம் பிடிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 19
கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் முதல் 2018 மே மாதம் வரை நடைபெற்ற கருத்துக் கணிப்பில் 100 உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 மில்லியன் விமான பயணிகள் கலந்து கொண்டு தேர்வு செய்ததன் அடிப்படையில் ஸ்கைட்ராக்ஸ் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

வழமைபோல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்தது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் 4வது இடமும், எதிஹாத் ஏர்வேஸ் 15 இடமும் பிடித்துள்ளன. அதேவேளை தொடர்ந்து 14வது ஆண்டாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் 'சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை' கொண்ட விமான நிறுவனம் என்ற விருதையும், மத்திய கிழக்கு விமான நிறுவனங்களிலேயே கனிவான சேவை செய்யும் ஊழியர்களை கொண்ட நிறுவனம் என்ற விருதையும் தட்டிச் சென்றது.

எதிஹாத் நிறுவனத்திற்கு பின்னால் தான் ஏர் பிரான்ஸ் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க விமான நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.