.

Pages

Tuesday, July 24, 2018

அதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் புதிய இணையதளம் அறிமுகம்!

அதிராம்பட்டினம், ஜூலை 24
அதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் இன்று செவ்வாய்க்கிழமை புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு தரமான முழு நேர மருத்துவச் சேவை வழங்கும் நோக்கில், தன்னார்வலர்களின் பெரும் பங்களிப்போடு, ஷிஃபா மருத்துவமனையின் புனரமைப்பு பணிகள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. மருத்துவமனையில் நவீன கட்டமைப்பு, உள் நோயாளி, வெளி நோயாளி பிரிவுகள், மருந்தகம், ஆய்வகம், ஆம்புலன்ஸ் வசதி, அனுபவமிக்க மருத்துவக்குழுவினரால் மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளும் அமைய பெற்ற மருத்துவமனையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், விவசாயிகள், மீனவர்கள் அதிகமிகுந்த கடலோரப்பகுதியான அதிராம்பட்டினத்தில் ஷிஃபா மருத்துவமனை கடந்த 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று (ஜூலை 24 ) செவ்வாய்க்கிழமை 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதையொட்டி, பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவமனையின் புதிய இணையதளச் சேவை ( http://www.adiraishifahospital.com ), அதன் நிர்வாகத்தின் சார்பில் இன்று அறிமுகப்படுத்தபட்டு உள்ளன. இதன் செம்மைப்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் இதர சேவைகள் அடுத்தடுத்து மெருகூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் மொழி இணையச் சேவை, ஆன்டராய்டு, ஐபோன் பயனர்களுக்கான செயலிகள் (Apps) போன்ற வசதிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும், மருத்துவமனை இணையதளத்தில் பயனர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டால், மருத்துவமனை தொடர்பான செய்திகள், சிறப்பு மருத்துவர்கள் வருகை மற்றும் சிறப்பு சலுகைகள் பற்றிய செய்திகளை  உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்களின் ஆலோசனைகள், நிறை ~ குறைகள் பதிவு செய்துகொள்ளும் வசதியும் அதில் இடம்பெறும்.

இந்நாளில், அதிராம்பட்டினத்தில் ஷிஃபா மருத்துவமனை தொடங்க காரணமாக இருந்த நல்லுள்ளங்கள் அனைவரையும் நினைவு கூறி, அவர்கள் ஈருலகில் வெற்றியைப் பெற, எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திப்பதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு:
இணைய தள முகவரி: http://www.adiraishifahospital.com
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.