அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் ஆற்று நீர் திறந்துவிடக்கோரியும், அதிராம்பட்டினம் பகுதி ஆற்று நீர் வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடந்த திங்கட்கிழமை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், துப்புரவுப் பணியாளர்கள் கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில், சிஎம்பி வாய்க்கால் ஆற்று நீர் வழிப் பாதையில் உள்ள அடைப்புகளை சீர்செய்யும் பணிகளில் அதிரை பேரூராட்சி பணியாளர்கள் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர். பணிகளை நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பார்வையிட்டனர்.
வாழ்த்துகள் சகோ
ReplyDelete