.

Pages

Monday, July 16, 2018

அதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி சாவு!

அதிராம்பட்டினம், ஜூலை 16
அதிராம்பட்டினத்தை அடுத்த மகிழங்கோட்டை செட்டியப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பாலசுப்பிரமணியனின் மகள் மகாதேவி (16). அதிராம்பட்டினத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார்.

இவர் வயிற்று வலி நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஜூலை 10 ஆம் தேதி வீட்டிலிருந்த மகாதேவிக்கு வழக்கம் போல் வயிற்று வலி ஏற்பட்டதாம். அப்போது நோய்க் கொடுமை தாங்காமல் அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த மகாதேவி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) காலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.