.

Pages

Sunday, July 15, 2018

அமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்தைகளுக்கான விசா கட்டணம் தள்ளுபடி!

அதிரை நியூஸ்: ஜூலை 15
அமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்தைகளுக்கான விசா கட்டணம் தள்ளுபடி

இனி வரும் வருடங்களில் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 ஆகிய தேதிக்கு உட்பட்ட காலகட்டத்தில் மட்டும் அமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அமீரக அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த சலுகை குடும்பத்தினர் சுற்றுலா செலவின் பாராத்தை ஓரளவு குறைக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே அமீரக விமான நிலையங்கள் வழியாக டிரான்ஸிட் பயணிகளாக வருவோர் 48 மணிநேரம் வரை விசா கட்டணம் செலுத்தாமல் நாட்டிற்குள் வரலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமீரக விமான நிலையங்கள் மூலமாக மட்டும் கடந்த 3 மாதங்களில் 32.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.