.

Pages

Monday, July 16, 2018

காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி !

அதிராம்பட்டினம், ஜூலை 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.

பேரணியை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு, அதிராம்பட்டினத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிரை பேருந்து நிலையம் வரையிலான பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில், கல்லூரி பேராசிரியர்கள் ஓ.ஹாஜா முகைதீன், என்.ஜெயவீரன், பி.குமாரசாமி, கே.முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர். பேரணி ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் எஸ்.சாபிரா பேகம், கே.முத்துக்குமாரவேல், எம்.பழனிவேல் ஆகியோர் செய்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.