அதிரை நியூஸ்: ஜூலை 19
துபை மாநகரின் அடுத்த 100 ஆண்டுகளில் பெய்யவுள்ள மழை மற்றும் வெள்ளத்தினை நகருக்குள் தேங்கவிடாமல் வெளியேற்றுவதற்காக டிரில்லிங் செய்யும் பணிகளுக்கான முன்னெச்சரிக்கை திட்டமிடல்கள் கடந்த 2017 அக்டோபர் மாதம் துவங்கின, இந்த பணிகளை முழுமையாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடித்துவிட அதாவது 'துபை எக்ஸ்போ 2020' நிகழ்வுக்கு முன் வடிகால் பணிகளை துவக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம் தோண்டும் பணிகளுக்காக 2 பிரம்மாண்ட சுரங்கம் தோண்டும் கருவிகள் சீனாவின் குவாங்சோ நகரில் தயாராகி வருகின்றன. இவை எதிர்வரும் 2018 அக்டோபர் மாதத்திற்குள் துபைக்கு வந்து சேரும். அதன்பின் மீண்டும் அந்தக்கருவிகள் துபையில் பொருத்தப்பட்டு 2018 டிசம்பரில் சுரங்கம் தோண்டும் பணிகளை துவக்கி 2020 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் முடிக்கும். ஒவ்வொரு மெஷினையும் சீனாவில் செய்து முடித்து மீண்டும் துபையில் ரீ-அசெம்பிளிங் செய்திட 364,000 மனித மணிநேரங்கள் தேவைப்படும்.
துபை மாநகரத்தின் கீழே சராசரியாக 42 மீட்டர் ஆழத்தில் அமையவுள்ள இந்த சுரங்கப் பாதைகளின் மொத்த தூரம் சுமார் 490 கி.மீ. சுரங்கம் தோண்டும் இந்த கருவிகளின் சுற்றளவு 11.05 மீட்டராகும். இது தோண்டும் சுரங்கத்தின் குறுக்களவு காங்கிரீட் பணிகளுக்குப் பின் 10 மீட்டராக அமையும். ஓவ்வொரு டிரில்லிங் மெஷினும் நாள் ஒன்றுக்கு 19 மீட்டர் வரை சுரங்கம் தோண்டும் வல்லமையுடையவை.
டிரில்லிங் மெஷின் முதலாவது பணியாக பணியாக ஷேக் ஜாயித் ரோடு 7வது இன்டர்செக்ஷனில் துவங்கி கடலை நோக்கி சுமார் 2.4 கி.மீ தூரத்தில் அமையவுள்ள பம்ப்பிங் ஸ்டேசன் வரை செல்லும்.பின்பு மெஷின் கலட்டப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டு 7வது இன்டர்செக்ஷனில் துவங்கி 8வது இன்டர்செக்ஷன் வரை 1.7 கி.மீ தூரத்திற்கு சுரங்கம் தோண்டும். அதேவேளை இன்னொரு டிரில்லிங் மெஷின் எக்ஸ்போ 2020 இன்டெர்செக்ஷனில் துவங்கி ஜெபல்அலி – 87வது இன்டெர்செக்ஷன் வரை 5 கி.மீ தூரத்திற்கு சென்றபின் தொடர்ந்து 8வது இன்டர்செக்ஷன் நோக்கி தனது பணியை தொடரும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.