'நீராதாரம்', உயிராதாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் நீர் நிலைகள் பாதுகாப்பு, அதன் பரமாரிப்பு, அவற்றை மேம்படுத்தும் சேவைகளுக்காக தொடங்கப்பட்ட அமைப்பு 'நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை' (WCT). இந்த அமைப்பின் ஆலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். கூட்டத்தில், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை' (WCT) நோக்கம் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் ஆற்று நீர் திறந்துவிடக்கோரி, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அளித்த கோரிக்கை மனுக்கள் பற்றிய விவரங்கள் பேசப்பட்டன.
கூட்டத்தில், அதிராம்பட்டினம் பகுதி ஆற்று நீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை சீர்செய்யும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியரோடு இணைந்து முன்னெடுத்துச் செல்வது, இப்பணிகளுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்துவது, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை' (WCT) அறிமுகக் கூட்டம் அதிரையில் நடத்துவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, இதன் அடுத்தக் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் 1 ந் தேதி நடத்துவது. அதில், அதிராம்பட்டினம் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், அதிரை கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராம பஞ்சயாத்தார்கள் ஆகியோரை அழைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில், எம். அகமது சிராஜுதீன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் பி.எம்.கே தாஜுதீன், ம.செ ஜபருல்லா, ஏ.எஸ் அகமது ஜலீல், ஏ.எம் நூராணி, எம்.நிஜாமுதீன், முகைதீன் அப்துல் காதர், அகமது ஹாஜா, மு.காதர் முகைதீன், அப்துல் லத்திப், ஏ.முகமது முகைதீன், என். முகமது ஜபருல்லா, அஸ்ரப் அலி, எம்.ஏ அபுல் ஹசன், ஏ.சேக் அலி, எம்.ஏ ஹாஜா கமால், அகமது அனஸ், ஏ.மர்ஜூக், ஜலீல், என்.அபுதாஹிர், ஏவிஎம் அபூபக்கர், முகமது ரபி ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.