.

Pages

Wednesday, July 18, 2018

புனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுகள் இறக்குமதி!

அதிரை நியூஸ்: ஜூலை 18
ஹஜ் யாத்திரையின் புனிதக் கடமைகளில் ஒன்றான உளூஹிய்யா எனப்படும் குர்பானியை நிறைவேற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து இதுவரை சுமார் 1.4 மில்லியன் ஆடுகள் புனித மக்காவிற்குள் ஜித்தா துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆடுகள் இறக்குமதியாளர்களுக்கு கடந்த வாரம் வரை 61,813 பெர்மிட்டுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன என சவுதியின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகத்தின் மக்கா பிரதேச இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஹஜ் சீஸனுக்காக 131 கால்நடை மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் நியமிக்கப்பட்டு இறக்குமதியாகும் ஆடுகளின் உடல்நிலை, சுகாதாரம், எந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றது, அதன் மேல் குறியீடுகளை எழுதும் பணி போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த கால்நடை மருத்துவக் குழுவினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு மக்காவை சுற்றியுள்ள காக்கியா, ஓல்டு ஸூமைசி, ஷராயீ, நூரிய்யா, ஹாதா, ஹூசைனியா மற்றும் ஜூரைனா போன்ற பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.