அதிரை நியூஸ்: ஜூலை 18
பராமரிப்பு மற்றும் மேம்பாடு பணிக்காக துபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 நாட்களுக்கு மூடப்படுகின்றது
துபை விமான நிலையத்தின் வடபகுதி ரன்வே கடந்த 2014 ஆண்டு 45 நாட்களுக்கு மூடப்பட்டு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் எதிர்வரும் 2019 ஏப்ரல் 16 முதல் மே 30 வரை தென்பகுதி ரன்வே தற்காலிகமாக மூடப்படுகின்றது.
தற்போது துபை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் சுமார் 1,100 விமானங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் ஒரு ரன்வே மேம்பாட்டு பணிகளுக்காக மூடப்படுவதால் ஒரேயொரு ரன்வேயில் இத்தனை விமான சேவைகளையும் கையாள்வது என்பது இயலாத காரியம் என்பதால் பல்வேறு விமானச் சேவைகள் ரத்து செய்யவும், சில தடங்களில் சேவைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், சில சேவைகளை துபை வேல்டு சென்ட்ரல் எனப்படும் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட்டு வருகின்றன.
மேலும் சார்ட்டர்டு விமானங்கள், சரக்கு விமானங்கள் மற்றும் பொது பயணச்சேவையில் ஈடுபட்டுள்ள விமானங்கள் அனைத்தும் துபை வேல்டு சென்ட்ரலுக்கு மாற்றப்படுகின்றன.
எமிரேட்ஸ் மற்றும் பிளை துபை விமான நிறுவனங்கள் தங்களுடைய புதிய அட்டவனையை விரைவில் வெளியிடவுள்ளன. அதேபோல் பிற விமான நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட 45 நாட்களுக்குரிய அட்டவனையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சதர்ன் ரன்வே எனப்படும் தென்பகுதி ஓடுதள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக சுமார் 60,000 டன் அஸ்பால்ட் (தார்), 8,000 கியூபிக் மீட்டர் காங்கிரீட் கலவைகளுடன் சுமார் 800 கி.மீ அளவிற்கான மின் கேபிள்களும், 5,500 மின் விளக்குகளும் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றப்படவுள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.