.

Pages

Tuesday, July 24, 2018

ஹஜ் யாத்திரை நெருங்குவதையொட்டி அனுமதி பெறாதவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 24
ஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு

புனித ஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதி பெறாதவர்கள் ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் வர்த்தகப் பணிகளில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக வெளிநாட்டினர்களையும் அவர்களது வாகனங்களை மக்காவை சுற்றியுள்ள எல்லை நுழைவாயில்களிலிருந்து திருப்பியனுப்பும் பணி கடந்த ஜூலை 9 முதல் முழுவீச்சில் துவங்கியுள்ளது. இவ்வாறாக கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 72,037 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அவர்களின் 30,449 வாகனங்களும் மக்கா எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.

ஆயிஷா பள்ளி அருகேயுள்ள தனீம், தாயிப் நகரின் சாயில் அருகேயுள்ள புகைத்தா, புதிய மற்றும் பழைய ஸூமைஷி, காக்கியா, ஷரயா போன்ற சோதனைச்சாவடிகளிலிருந்து வாகனங்களும் வெளிநாட்டினரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை 3 வகையான பிரிவினருக்கு மட்டும் புனித மக்காவினுள் நுழைய அனுமதியளிக்கப்படுகிறது. ஹஜ் பெர்மிட் உடையவர்கள், புனித மக்கா பிரதேச விசா உடையவர்கள் மற்றும் மக்காவினுள் பணியாற்ற சிறப்பு அனுமதி பெற்றவர்கள். புனித மக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களில் பணியாற்றிட சிறப்பு அனுமதி இந்த வருடம் முதல் ஆன்லைன் வழியாக வழங்கப்படுகின்றது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.