.

Pages

Tuesday, July 17, 2018

ஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி சுடும் இடம் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 17
வரலாற்றில் மனிதர்கள் வேட்டைச் சமூகமாகவே இருந்தார்கள், அவர்கள் குழுவாக மிருகங்களை வேட்டையாடி உண்பவர்களாக இருந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் தான் உணவை விளைவித்து சாப்பிடக்கூடியவர்களாக மாறினார்கள் என்ற கருதுகோளை உடைக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ரொட்டி தயாரித்தல் சம்பந்தமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதிலேயே இதுதான் உலகின் மிகப்பழமையானது.

ஜோர்டான் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால ரொட்டி சுடும் அடுப்பு, மாவு அரைக்கும் திருகை மற்றும் ரொட்டியின் துகள்கள் போன்றவற்றை ரேடியோ கார்பனிங் மூலம் ஆராய்ந்த போது இவை சுமார் 14,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகளின் வேட்டை சமூகம் குறித்த முந்தைய பார்வையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அதாவது மனிதன் வெறும் மாமிச உணவுகளுடன் தனது உணவுப்பழக்கத்தை சுருக்கிக் கொள்ளவில்லை மாறாக விளைச்சல் பொருட்களையும் நன்கு பன்படுத்தி இருவகை உணவுகளை சேர்த்து உண்ணவும் தெரிந்து வைத்திருந்துள்ளான் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இந்த பழங்கால ரொட்டி இன்றைய பிட்டா எனப்படும் ரொட்டிக்கு ஒப்பானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.