.

Pages

Tuesday, July 24, 2018

பறவைக்கு தண்ணீர் புகட்டிய ஷார்ஜா துப்புரவு தொழிலாளியின் வைரல் வீடியோ!

அதிரை நியூஸ்: ஜூலை 24
அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடும் கோடை நிலவி வருவதால் பறவைகள், மிருகங்கள் போன்றவை தண்ணீருக்காக திண்டாடி வருகின்றன. இந்நிலையில் தண்ணீருக்காக தவித்த பறவை ஒன்றின் மீது இரக்கம் கொண்ட ஷார்ஜா துப்புரவு தொழிலாளி ஒருவர் தன் கைகளில் தண்ணீரை அள்ளிக் கொடுக்க பறவை அச்சமின்றி அமர்ந்து நீரருந்துகின்றது. மேலும் தண்ணீரை அருந்திய பின் அப்பறவை தன் நன்றியை அத்தொழிலாளிக்கு தெரிவிக்கும் வண்ணம் அவர் தோளின் மீது சென்று அமர்கின்றது. இந்தக் காட்சியை ஒருவர் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிய அனைத்து நன்மக்களாலும் போற்றப்படும் வைரல் வீடியோவாக வலம் வருகின்றது.

பறவைகள், மிருகங்கங்களுக்காக உங்களுடைய வீட்டின் மொட்டை மாடிகள், வீட்டிற்கு வெளியேயும், தெரு முக்கங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் சிறிதளவு தண்ணீரை வைத்து உதவுங்கள் என பறவைகள், மிருக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

வீடியோவைக் காண

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.