.

Pages

Monday, July 23, 2018

அஜ்மானில் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்த உயிர் பிழைத்த இந்தியர் நாடு திரும்பினார்!

அதிரை நியூஸ்: ஜூலை 23
அஜ்மானில் 9-வது மாடியிலிருந்த தவறி விழுந்து உயிர்பிழைத்த இந்தியர் நாடு திரும்பினார்.

அஜ்மானில் இயங்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக பீஹார் மாநிலத்திலிருந்து கடந்த 2017 டிசம்பரில் அசோக்குமார் என்ற இளைஞர் வந்தார். அவர் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு விசாவிற்கு மாறுமுன் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தின் 9வது மாடியிலிருந்து கால் இடறி தவறிவிழுந்தார். இச்சம்பவத்தில் அவருடைய அவருடைய ஒரு கால், இடுப்பு முறிந்ததுடன் தலையிலும் பல இடங்களில் பலத்த அடிபட்டதன் விளைவாக அஜ்மானிலுள்ள கலீபா மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் போதே அவர் கோமா நிலையிலிருந்தார்.

கலீபா மருத்துவமனையில் பிஸியோதெராபிஸ்ட்டின் தொடர் சிகிச்சையால் அவருடைய காயங்கள் ஆறின, எலும்புகள் கெந்திக்கெந்தி நடக்குமளவுக்கு சரியாயின ஆனாலும் அவருடைய நினைவுகள் மறந்து போயிருந்தார். பீஹார் போலீஸ் உதவியுடன் இந்திய தூதரகத்தினர் அவருடைய குடும்பத்தை கண்டுபிடித்தனர். அசோக்குமாருக்கு தேவையான உதவிகளையும் தவறாமல் செய்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் சத்தமாக அவருடைய தாயின் பெயரை கூறியதை கேட்டு கண்களிலிருந்து கண்ணீரை தாரைதாரையாக வடித்தார் எனினும் பேச இயலவில்லை என்றாலும் இதுவே பெரிய முன்னேற்றமாக கருதப்பட்டது. ஓரளவு தேறினாலும் அவரால் முன்புபோல் வேலைக்குச் செல்ல இயலாது, பேச இயலாது.

இறுதியாக, இந்திய தூதரகத்தின் முயற்சியால் அஜ்மானின் கலீபா மருத்துவமனை சிகிச்சைக்கான கட்டணத்தை முற்றாக தள்ளுபடி செய்து உதவியது. அஜ்மானின் நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் கட்டுமான நிறுவனம் அவருக்கு 3.5 லட்சம் இந்திய ரூபாய்களை நஷ்டஈடாக வழங்கியதுடன் விமான டிக்கெட்டையும் எடுத்துத் தந்து அவருக்குத் துணையாக இன்னொரு தொழிலாளியையும் வீடுவரை கொண்டு சென்று விட்டுவர துணைக்கு அனுப்பியது.

ஏழ்மையான அவரது குடும்பத்தினர் பட்னாவிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையை தொடர முடிவு செய்துள்ளனர். 2 மற்றும் 4 வயது என இரு பெண் குழந்தைகளின் தந்தையான அசோக்குமார் மீண்டு எழுவார் என குடும்பத்தினர் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.