.

Pages

Tuesday, July 17, 2018

சவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு மாறும் ஹஜ் சேவை!

அதிரை நியூஸ்: ஜூலை 17
சவுதியில் வரும் 2030 ஆண்டிற்குள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்திற்கு மாறும் ஹஜ் சேவை.

சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள யூடியூப் காணோளி விளக்கத்தில், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஹஜ் சேவைகள் அனைத்தும் படிப்படியாக செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத் திட்டத்தின் (Artificial Intelligence & technology) கீழ் கொண்டு வரப்பட்டு மிகவும் எளிமையான சேவையாக மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அது எவ்வாறு செயல்படும் என்ற யூக விளக்கப்படமும் தரப்பட்டுள்ளது.

யூடியூப் வீடியோவில் கண்டுள்ளபடி, உலகெங்கிலுமிருந்து ஹஜ் செய்ய விரும்பும் முஸ்லீம்கள் தங்களின் கைகளில் உள்ள மொபைல்களிலிருந்தே ஆப் (Mobile App) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட சில தினங்களில் உங்களுக்கு ஒரு சிறிய பெட்டி ஒன்று அனுப்பப்படும். அந்த பெட்டியில் ஒரு மின்னனு அட்டை (Electronic Card), ஒரு பிரேஸ்லெட் (Bracelet) மற்றும் ஒரு இயர் போன் (Ear Phone) ஆகியவை இருக்கும். இவை மூன்றையும் ஹஜ் யாத்ரீகர்கள் ஹஜ் கிரிகை காலத்தின் போது எப்போதும் தங்களுடனேயே வைத்திருக்க வேண்டும்.

விமான நிலையத்தில் ஹஜ்ஜூக்காக வந்திறங்கியவுடன் ஹஜ் யாத்ரீகர்கள் தங்களிடம் உள்ள மின்னனு அட்டை மூலம் கஸ்டம்ஸ் சோதனைகளை முடித்துக் கொண்டு ஹரமைன் ரயிலில் (Haramain Fast Train) ஏறினால் அந்த ரயில் உங்களை நீங்கள் தங்க வேண்டிய ஹோட்டலிலேயே கொண்டு போய் இறக்கிவிடும். ஹோட்டலிலும் நீங்கள் செக்கின் (Check-In) செய்வதற்காக காத்திருக்க வேண்டியதில்லை, அந்த மின்னனு அட்டையை பயன்படுத்தியே உங்களுடைய அறை கதவுகளை திறந்து நேரடியாகவே உள்ளே சென்றுவிடலாம். உங்களுடைய லக்கேஜ்கள் தனியானதொரு சேவையின் மூலம் விமான நிலையத்திலிருந்து நீங்கள் தங்கியிருக்கும் அறைக்கே கொண்டு வந்து தரப்படும்.

நீங்கள் அணிந்திருக்கும் பிரேஸ்லெட்டில் உங்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் பதியப்பட்டிருக்கும். நீங்கள் தவாப் செய்வதை அந்த பிரேஸ்லெட் எத்தனை சுற்று சென்றுள்ளீர்கள் என்பதை கணக்கிடும் அதேபோல் ஸபா மற்றும் மர்வா மலைகளுக்கிடையே தொங்கோட்டம் (ஸயி) ஓடுவதையும் கணக்கிடுவதுடன் ஓட வேண்டிய இடம் ஆரம்பமாவதையும் முடிவதையும் அலாரம் மூலம் தெரியப்படுத்தும்.

அதேபோல் 2030 நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள் என்ற அச்சமே வேண்டாம், உங்களிடம் உள்ள மின்னனு அட்டையை பயன்படுத்தி மொபைல் போன் வழியாகவே தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேரலாம்.

ஹஜ் கிரிகைகளின் காலத்தில் உங்களிடம் உள்ள இயர் போனையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இந்த இயர்போன் தேவையான இடங்களில் அதற்குரிய துஆக்களை சொல்லித்தரும். அதேபோல் ஹஜ்ஜூக்காக சர்வதேசங்களிலிருந்தும் வரும் யாத்ரீகர்களுடன் உரையாடுவது அதிகாரிகளுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது, இனி உங்களுடைய இயர்போன் அவர்கள் சொல்வதை உங்களுடைய மொழிகள் மொழிபெயர்த்து சொல்லவுள்ளதால் அந்தப் பிரச்சனையும் தீரும்.

மக்கா ரோடு திட்டம்
நடப்பு ஆண்டு ஹஜ்ஜில் முதன்முதலாக சோதனை அடிப்படையில் மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஹஜ் யாத்ரீகர்களுக்கு 'மக்கா ரோடு இனிஷியெட்டிவ்' என்ற திட்டம் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் வழியாக மலேஷியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வரும் ஹஜ் பயணிகள் தங்களுடைய நாட்டிலுள்ள ஏர்போர்ட்டுகளிலேயே சவுதி குடிநுழைவு விவகாரங்களை முடித்துக் கொண்டு விமான ஏறலாம்.

இந்த ஹஜ் பயணிகள் சவுதி விமான நிலையங்களில் எதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. இவர்களுடைய லக்கேஜூகள் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் அறைக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும். இந்த திட்டத்தின் சோதனையின் அடிப்படையில் எதிர்வரும் ஹஜ் காலங்களில் பிற நாடுகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.