.

Pages

Friday, July 20, 2018

11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜூலை 20
சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ஏ. பஹாத் அகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றிய செயலளார் கே. கிருஷ்ணன் மூர்த்தி, அமைதிப்பறவைகள் காது கேளாதோர் நலச் சங்கத் தலைவர் எஸ்.கார்த்திகேயன், அதிராம்பட்டினம் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா செரிப், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் ஹ.ஜலீல் முகைதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், சென்னையில் காது கேளாத, வாய் பேச இயலாத 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு உடனடி தூக்குலிடவும், பாலுணர்வைத் தூண்டும் இணையதளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை செய்யவும், பாலியல் வன்புணர்வு சட்டத்தை கடுமையாக்கவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்ட முடிவில், செயலளார் அ. முகமது ராவுத்தர் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், அதிராம்பட்டினம் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்கத்தினர் உட்பட 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்களில் கறுப்புத்துணியை கட்டிக்கொண்டும், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.