அதிராம்பட்டினம், ஜூலை 23
'நீராதாரம்', உயிராதாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் நீர் நிலைகள் பாதுகாப்பு, அதன் பரமாரிப்பு, அவற்றை மேம்படுத்துதல் போன்ற சேவைகளுக்காக தொடங்கப்பட்ட அமைப்பு 'நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை' (WCT). அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களின் முழு முயற்சியில், சுமார் 20 க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அரசு பதிவு பெற்ற ஒரு அமைப்பாக கடந்த ஜூலை 18 ந் தேதி முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
இந்த அமைப்பின் முதல் கோரிக்கையாக, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் ஆற்று நீர் திறந்துவிடக்கோரி, மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்களிடம் இன்று திங்கட்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும், அதிராம்பட்டினம் பகுதி ஆற்று நீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகளை முன்னதாக சீர்செய்ய வேண்டுகோள் வைக்கப்பட்டன.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள், ஆக்கிரமிப்பு வாய்க்காலை சீர் செய்ய சம்பந்தபட்ட பேரூராட்சி உதவி இயக்குநரிடம் நேரில் உத்தரவு பிறப்பித்தார். மேலும், அதிராம்பட்டினம் பகுதிக்கு தேவையான தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
இதன் பின்னர், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன் ஆகியோரின் அலுவலகத்திற்கு நேரில் சென்று தனித்தனியே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு தேவையான அளவு ஆற்று நீர் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
அப்போது, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், சமூக ஆர்வலர்கள் ஏ.எஸ் அகமது ஜலீல், ஏ.எம் நூராணி, எம்.நிஜாமுதீன், கோ.மருதையன், எம்.இஷ்ஹாக், அகமது ஹாஜா, மு.காதர் முகைதீன், எம். அகமது சிராஜுதீன், ஏ.சாகுல்ஹமீது, ஏ.முகமது முகைதீன், என். முகமது ஜபருல்லா, எம். முகமது மீராசாஹிப், அ.மு ஜஹபர் அலி, எஸ்.எம்.ஏ ஜாஃபர், அஸ்ரப் அலி, எம்.ஏ அபுல் ஹசன், ஏ.சேக் அலி, சே. அப்துல் காதர், எம்.ஏ ஹாஜா கமால், ஏ.மர்ஜூக், என்.அபுதாஹிர், பி.முகமது முகைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 |
மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை வைத்த போது |
 |
கல்லணை கால்வாய் கோட்ட அலுவலரிடம் கோரிக்கை வைத்தபோது |
 |
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் |
 |
தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தபோது |
 |
கல்லணை கால்வாய் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் |
 |
அதிரை வண்டிப்பேட்டையில் இருந்து தன்னார்வலர்கள் புறப்பட்ட போது |
கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.