.

Pages

Tuesday, September 30, 2014

நாட்டு நலப்பணித் திட்ட துவக்க விழா !

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட தொடக்க விழா ஆண்டிகச்சல்- இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
         
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.இளங்கோவன் தலைமையேற்றார் . பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.பொக்கிஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஆர்.ராமநாதன் வரவேற்றார்.பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் .வட்டாட்சியர் மாணிக்கவள்ளி முகாமினை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் பாரி அழகப்பன், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
       
அதனை தொடர்ந்து " யோகாவும் பக்தியும்" என்ற தலைப்பில் ஆசிரியர் என்.நடராஜன் உரை நிகழ்த்தினார். பள்ளி வளாகத்தை மாணவர்கள் சீரமைத்து, தூய்மைப்படுத்தினர். மகப்பேறு  மருத்துவர் வி.செல்வி " பொது சுகாதார விழிப்புணர்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார். " வெள்ளத்தனைய மலர் நீட்டம் "  என்ற தலைப்பில் பாவலர் மு.தங்கவேலனார் உரையாற்றினார். உறுப்பு தானம், இரத்த தானம், அனைவருக்கும் கல்வி, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சம்பந்தமான மாணவர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது. வீரகாளியம்மன் கோயில் சாலை சீரமைப்பு பணியையும் மாணவர்கள் மேற்கொண்டனர். திட்ட அலுவலர் இராமநாதன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம் : 
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி

தீர்ப்பு எதிரொலி : அதிரையர் ஆற்றில் குதித்து தற்கொலை !

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிரை பேரூராட்சியை சேர்ந்த அ.தி.மு.க.வினரும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைய இருந்த நேரத்தில் அதிரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் M. மணி (வயது45), அதிரை பேரூராட்சி கவுன்சிலர் உதயகுமார், முருகானந்தம், சபியுல்லா ஆகிய 4 பேர் அங்கிருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள புதுஆற்றுபாலத்திற்கு வந்தனர்.

அப்போது M. மணி ஆற்றின் பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி, ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். ஜெயலலிதா வாழ்க என்று கோஷமிட்டபடி ஆற்றில் குதித்தார். உடனே உடன் வந்த மற்ற 3 பேரும் அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தனர். மேலும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தவர்களும் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மாமணியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

அதிரையில் கன மழையால் மீன் வியாபாரம் பாதிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படும்.

அதிரை சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், ஆழ்கடலில் காணப்படும் மீன்கள் கரைக்கு வரத் துவங்கியுள்ளன. இதனால் மீனவர்கள் வலையில் அதிகமாக சிக்குகின்றன. பிடிபடும் மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற கடைத்தெரு மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு உள்ளூர் மற்றும் அதிரை சுற்று வட்டாராப்பகுதிகளின் மீன் வியாபாரிகளே அதிகளவில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிரையில் இன்று காலை மீண்டும் கனமழை பெய்து வருவதால் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் மீன் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. மீன்கள் தேங்கி காணப்படுகின்றன.





முத்துப்பேட்டையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் ! [ படங்கள் இணைப்பு ]

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து முத்துப்பேட்டையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் அதிமுக முத்துப்பேட்டை நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள் :
முத்துப்பேட்டை சூனா ஈனா 









பட்டுக்கோட்டையில் அதிமுகவினர் நடத்திய அமைதி ஊர்வலம் ! [ படங்கள் இணைப்பு ]

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்  நடத்தினர். அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, நகர செயலாளர் பாரதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர தலைவர் குமார், நகர செயலாளர் பாண்டியராஜன், அனி சேரா ஓட்டுநர் மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் நகரசெயலாளர் விவேகானந்தன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றம் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பேருந்துநிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மணிக்கூண்டினை அடைந்தது. அங்கு கூடிய அதிமுகவினர் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்பபு வழங்கியதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.







நிருபர் I.M. ராஜா ( பட்டுக்கோட்டை )

அதிரையில் நல்ல மழை ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மாத்திரம் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல் காலை நேரங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய கன மழை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேகம் கூட்டங்களாக காட்சியளிக்கின்றன. தற்போது அதிரை குளுமையாக காட்சியளிக்கிறது. மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.






மரண அறிவிப்பு ! [ ஆலடித்தெரு ஹாஜி செ.அ.மு சேக்கா மரைக்காயர் ]

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.அ.மு. அப்துல் வஹாப் மரைக்காயர் அவர்களின் மகனும், அஹமது கபீர், மர்ஹூம் அன்வர்தீன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி அப்துல் வஹாப், அப்துல் அஜீஸ் ஆகியோரின் தகப்பனாரும், அஹமது அஸ்ரப் அவர்களின் மாமானாருமாகிய ஹாஜி செ.அ.மு சேக்கா மரைக்காயர் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Monday, September 29, 2014

அதிரை பைத்துல்மாலின் செப்டம்பர் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 28/09/2014
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் செப்டம்பர், 2014
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை `
1
கடற்கரைத் தெரு- 13 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
5200.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2400.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4400.00
4
புதுத்தெரு- 21  நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
8400.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4800.00
6
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
3200.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
3600.00
8
பெரியநெசவுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4000.00
9
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2800.00
10
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2000.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1200.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2000.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1600.00
14
C.M.P லைன்- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1200.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1200.00
16
வெற்றிலைக்காரத் தெரு- 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
17
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
400.00
18
புதுஆலடித்தெரு- 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
19
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
20
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
400.00
21
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
400.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
400.00
23
மண்ணப்பங்குளம் - 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
24
சாயக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
25
திலகர் தெரு  - 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
26
சுப்ரமணிய கோயில் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
27
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
400.00
28
ஆறுமுககிட்டங்கி தெரு - நபர் ஒருவருக்கு
400.00
29
மேட்டுத்தெருநபர் ஒருவருக்கு
400.00

மொத்தம் 138 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்        
55,200.00
வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை `
1
கடற்கரைத்தெரு 2 நபர்களுக்கு
28,000.00
2
ஹாஜா நகர் 2 நபர்களுக்கு
40,000.00
3
அம்பேத்கார் நகர் 4 நபர்களுக்கு
80,000.00
4
நடுத்தெரு 2 நபர்களுக்கு
40,000.00
5
ஆஸ்பத்திரித்தெரு 1 நபருக்கு
20,000.00
6
மிலாரிக்காடு 1 நபருக்கு
20,000.00
7
பிள்ளையார் கோவில் தெரு 1 நபருக்கு
20,000.00
8
செக்கடித்தெரு 1 நபருக்கு
17,000.00
9
C.M.P லைன் 1 நபருக்கு
20,000.00
10
மேலத்தெரு 1 நபருக்கு
20,000.00
11
நேருஜித்தெரு 1 நபருக்கு
20,000.00

மொத்தம் 17 நபர்களுக்கு மொத்த ரூபாய்
3,25,000

திரும்பி வந்த நகைக்கடன் தொகை
எண்
விபரம்
தொகை `
1
நடுத்தெரு 14 நபர்களிடமிருந்து
1,02,500.00
2
புதுமனைத் தெரு 5 நபர்களிடமிருந்து
52,000.00
3
ஆஸ்பத்திரித்தெரு 4 நபர்களிடமிருந்து
35,000.00
4
வண்டிப்பேட்டை ஒரு நபரிடமிருந்து
3,000.00
5
கடற்கரைத்தெரு 4 நபர்களிடமிருந்து
31,000.00
6
கீழத்தெரு 2 நபர்களிடமிருந்து
40,000.00
7
அம்பேத்கார் நகர் 5 நபர்களிடமிருந்து
72,000.00
8
செட்டித்தெரு ஒரு நபரிடமிருந்து
5,000.00
9
புதுத்தெரு 3 நபர்களிடமிருந்து
18,000.00
10
மேலத்தெரு ஒரு நபரிடமிருந்து
17,000.00
11
பெருமாள் கோவில் தெரு ஒரு நபரிடமிருந்து
20,000.00
12
சுரைக்கா கொல்லை ஒரு நபரிடமிருந்து
18,000.00
13
பெரிய நெசவு தெரு ஒரு நபரிடமிருந்து
1,000.00
14
பழஞ்செட்டித்தெரு ஒரு நபரிடமிருந்து
18,000.00
15
சின்ன நெசவு தெரு 2 நபர்களிடமிருந்து
38,000.00
16
திலகர்தெரு ஒரு நபரிடமிருந்து
3,000.00
17
ஹாஜியார் லைன் ஒரு நபரிடமிருந்து
20,000.00

மொத்தம்  48 நபர்களிடமிருந்து ரூபாய்
4,93,500.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை `
மொத்தம்  4 நபர்களிடமிருந்து
5,100.00

சிறப்பு நலத்திட்ட கடன் (சினா தானா)வரவு
விபரம்
தொகை `
மொத்தம்  1 நபரிடமிருந்து
375.00

சதகா வரவு
விபரம்
தொகை `
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
700.00

ஜகாத் வரவு
விபரம்
தொகை `
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
23,000.00

ஆட்டுத் தோல் வரவு
விபரம்
தொகை `
மொத்தம் 1 நபரிடமிருந்து
100.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை  `
வரவு
2,000.00
செலவு
950.00

ஆம்புலன்ஸ் இலவச சேவை
விபரம்
தொகை  `
இலவச சேவை
1,800.00

1.   27-9-2014 அன்று முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை அடுத்து பேருந்துகள் இயங்கவில்லை. பட்டுக்கோட்டைக்கு சென்ற நமதூர் ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் திரும்பி வரமுடியாமல் தவிப்பதாக மணிக்கூண்டு பள்ளிவாசல் நிர்வாகிகளிடமிருந்து அதிரை பைத்துல்மாலுக்கு போன் வந்ததையடுத்து அதிரை பைத்துல்மால்ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஊர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டார்கள்.

2.   மேலும் நமதூர் ECR வழியில் தொண்டி வரை செல்லக்கூடிய இந்து மற்றும் முஸ்லீம் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பேருந்து இல்லாமல் நீண்ட நேரமாக தவித்து கொண்டிருந்தார்கள் அவர்களையும் அழைத்து வந்து பைத்துல்மால் மாடியில் தங்க வைத்து தண்ணீர் மற்றும் தேனிர் வழங்கி அன்று இரவு 9 மணிக்கு நமது ஆம்புலன்ஸ் மூலமும் மற்றும் SDPI சார்ந்த நிர்வாகிகளின் மூன்று வாகனங்கள் மூலமும் மொத்தம் 26 நபர்கள் சேதுபாவா சத்திரம் தொடங்கி தொண்டி வரைஅனுப்பி வைக்கப்பட்டார்கள். நமது ஆம்புலன்ஸ்க்கான போக்குவரத்து செலவு தான் மேலே உள்ளது.
மருத்தவ உதவி
விபரம்
தொகை `
மொத்தம்  6 நபர்களுக்கு
13,000.00


இதர உதவிகள்
விபரம்
தொகை `
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
                      மொத்தம் 2 நபர்களுக்கு மொத்த ரூபாய்
600.00
பொது செலவுகள்
விபரம்
தொகை `
 பொது செலவு
250.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை `
மின்சாரக் கட்டனம்
1,546.00
டெலிபோன் & இன்டர்நெட்
1,045.00
போஸ்டேஜ் & கொரியர்
130.00
ஸ்டேஷனரி செலவு
1020.00
நியூஸ் பேப்பர்
130.00
மொத்தம்
3,871.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை `
கணினி இயக்குனர்
4,000.00
கணக்காளர்
5,500.00
துப்புரவு தொழிலாளி
300.00
மொத்தம் 3 நபருக்கு
9,800.00

                                 கட்டிட பராமரிப்பு செலவு
விபரம்
தொகை `
போர் போட்ட வகையில் மொத்த செலவு
28,095.00


மாதந்திரக்கூட்டம்                                          தேதி : 28-09-2014                                                                                                 நிகழ்ச்சி நிரல்                                                      நேரம்: இரவு 7:00                                                                                    இடம்: பைத்துல்மால்

கிரா அத்                           :- ஜனாப்.நைனா முஹம்மது ஹாஃபிழ்  { ரியாத் கிளை நிர்வாகி }
தலைமை                           :- ஹாஜி. ஜனாப் S.பர்கத் { தலைவர் }
வரவேற்புரை                   :- ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முகைதீன் { துணைத் தலைவர் }
மாத அறிக்கை வாசித்தல்       :- ஹாஜி. ஜனாப் S.A.அப்துல் ஹமீது { செயலாளர் }
நன்றியுரை                   :- ஹாஜி. ஜனாப் H.முகமது இபுராஹிம் { துணைப் பொருளாளர் }

விவாதப் பொருள்:-  
1.    குர்பானி திட்டம் சம்மந்தமாக

தீர்மானம்

1.    இன்றைய கூட்டத்தின் தொடக்கமாக J.M.நைனா முகமது ஹாஃபிழ் (ரியாத் கிளை நிர்வாகி) கிராஅத் ஓதினார்கள்.
2.    வரவேற்புரையை அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி.ஜனாப்.S.K.M.ஹாஜா முகைதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
3.    மாத அறிக்கையை ஹாஜி.ஜனாப்.S.A.அப்துல் ஹமீது அவர்கள் சமர்பித்தார்கள். ஏக மனதாக ஏற்கப்பட்டது.
4.    குர்பானித்திட்டம் : ஒரு ஆட்டின் விலை ரூ 7000 முதல் ரூ 7500 என்றும்
மாட்டுப்பங்கு ஒன்றிர்க்கு ரூ 1250 என்றும் தீர்மானிக்கப்பட்டது.
5.    குர்பானித்திட்டம் வெற்றி பெற நிர்வாகிகளின் ஆதரவு கோரப்பட்டது, மாட்டு இறைச்சி வறியவருக்கு முறையாக வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
6.    விற்ற ஆடுகளை அறுப்பதற்கு ஆட்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
7.    அடுத்த மாதாந்திரக் கூட்டத்தை இன்ஷா அல்லாஹ் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இப்படிக்கு

                                                                அதிரை பைத்துல்மால் நிர்வாகம்