.

Pages

Friday, September 26, 2014

அரபு நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் எமிரேட்ஸ் முதல் பெண் விமானி மேஜர் மரியம் !

அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூரி. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனையான இவர், போர் விமானங்களை அனாயசமாக செலுத்துவதில் வல்லவர். இவர் எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர் ஆவார். 38 வயதான மரியம் சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினருடன் இணைந்து அரபு நாடுகளின் விமானப்படையினரும் அதிரடியாக குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தினர். எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் இத்தாக்குதலில் இணைந்தன.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட விமானங்களில் ஒன்றை மரியம் செலுத்தி அரபு நாடுகளை அசத்தியுள்ளார். 38 வயதான மரியம், போர் விமானங்களை செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்கத் தயாரிப்பு எப் 16 ரக விமானத்தை படு வேகமாக செலுத்தி குண்டு வீசித் தாக்குவதில் இவர் சிறந்தவராம். இளம் வயதிலேயே போர் விமான விமானியாக வேண்டும் என்பது மரியத்தின் கனவாக இருந்துள்ளது. ஆனால் சட்ட திட்டங்கள் இவருக்கு சாதகமாக இருக்கவில்லை. இதனால் குறிப்பிட்ட வயதுக்கு வந்ததும்தான் மரியம் தனது கனவை நனவாக்க முடிந்தது.

தற்போது சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகளில் குண்டு வீசித் தாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ள மரியம், தனி ஆளாக ரக்கா, இடிலிப், அலெப்போ ஆகிய நகரங்கள் மீது குண்டு வீசித் தாக்கி விட்டுத் திரும்பியுள்ளார்.
மரியம், அபுதாபியில் பிறந்தவர் ஆவார். அங்குள்ள கலீபா பின் சயத் விமானப்படை கல்லூரியில் படித்தவர். தனது விமான பயிற்சி குறித்து மரியம் கூறுகையில் தாம் பெண் என்பதால் எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. ஆண் வீரர்கள், விமானிகள் என்ன வகையான பயிற்சிகளைப் பெற்றார்களோ அதே பயிற்சி தான் தமக்கும் அளிக்கப்பட்டதாக கூறினார்.

Source : Khaleejtimes

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. //தற்போது சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகளில் குண்டு வீசித் தாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ள மரியம், தனி ஆளாக ரக்கா, இடிலிப், அலெப்போ ஆகிய நகரங்கள் மீது குண்டு வீசித் தாக்கி விட்டுத் திரும்பியுள்ளார்.
    மரியம், அபுதாபியில் பிறந்தவர் ஆவார். அங்குள்ள கலீபா பின் சயத் விமானப்படை கல்லூரியில் படித்தவர். தனது விமான பயிற்சி குறித்து மரியம் கூறுகையில் தாம் பெண் என்பதால் எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. ஆண் வீரர்கள், விமானிகள் என்ன வகையான பயிற்சிகளைப் பெற்றார்களோ அதே பயிற்சி தான் தமக்கும் அளிக்கப்பட்டதாக கூறினார்.//

    தான் கற்றவற்றை ஆக்களுக்கு பயன்படுத்துவோரே சிறந்தவர்கள் மாறாக இந்த பெண்மணி அவற்றை அழிவுக்கு பயன்படுத்தியவள் இதில் இவளுக்கு என்ன பெருமை உண்டு ????
    குடும்ப அரசியலும் வாரிசு அரசியலும் செய்யும் அரபுலக பணத்திமிர் ஆட்சியாளர்களால் வேண்டுமானால் இந்தப்பெண்
    புகலப்படலாம்.....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.