இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இன்று [ 15-09-2014 ] மாலை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் - செயலாளர் - பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு வாக்குகள் செலுத்தி தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றபட்டது.
இதில் தேர்தல் நடத்தும் பொறுப்பாளராக பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், முன்னாள் சம்சுல் இஸ்லாம் சங்கத்தலைவர் ஹாஜி உமர், பாக்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் நபர்களின் பெயர்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது.
முன்னதாக கூட்டத்தை ஹாபிஸ் உதுமான் அவர்களால் கிராத் ஓதி துவக்கி வைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர்களின் வாக்குகளை செலுத்த வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டது. இதில் சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்குகளை செலுத்தினர்.
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவராக ஹாஜி M.S. முஹம்மது ஹசன் அவர்களும், செயலாளராக ஹாஜி முஹம்மது சேக்காதி ( அக்ரி ) அவர்களும், பொருளாளராக ஹாஜி A.K அப்துல் ஜலீல் அவர்களும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
சங்க நிர்வாகத்தின் ஏனைய பொறுப்புகளுக்கு விரைவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்தக்கூட்டத்தில் சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த 3 ஆண்டுகளுக்கு செம்மையாக, குறிப்பாக மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலோடு நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteசகோதரகளுக்கு ....
ReplyDeleteஅதிரை பைத்துல்மால் போன்று இவர்களின் மக்கள் நலன்கள் மாதாந்திர அறிக்கையில் விளம்பரம் செய்யப்படவேண்டும் ....மேலும் இந்த சங்கத்தின் ஒரு சில குறிப்பிட்ட கும்பதாரின் தலைமை மற்றும் ஆளுமைகள் மாற்றி அமைக்கப்படவேண்டும் .
வெளிநாடு வாழ் சங்க வாசிகளுக்கும் ஓட்டு உரிமை வழங்கபடவேண்டும் ..
இதைசார்ந்து முஹல்லாஹ் பள்ளிகள் அதிகம் உள்ளதால் அந்த அந்த பள்ளிகளில் நடக்கும் திருமண வருமானங்கள் அந்த பள்ளிகளுக்கே சேரவேண்டும்
போதிய நிதி இல்லாமல் இருந்து வரும் இந்த முஹல்லாஹ் சார்ந்த பள்ளிகளுக்கு சங்கத்தின் மூலம் மாத வருவாய் தரப்படவேண்டும் .
இந்த முஹல்லாஹ் சார்ந்த அதிக நிதி உதவிகள் அதிரை பைத்துல்மாளுக்கும் பகிரபடுவதால் இவைகள் நிதி சார்ந்த பொது உதவிகளில் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால் முஹல்லா வாசிகளுக்கும் பொதுமக்களுக்கும் அதிகம் பலன் கிடைக்கும் .
இன்னும் பல பிற்பாடு அறியத்தருகின்றேன்.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த 3 ஆண்டுகளுக்கு செம்மையாக, குறிப்பாக மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலோடு நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
Congratulation well come to SIS-board
ReplyDeleteபிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
ReplyDeleteஸஹீஹுல் புகாரி 927. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள். தம் தோள் புஜத்தின் மீது மேலாடையைச் சுற்றிக் கொண்டு, கருநிறத் துணியால் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் அமர்ந்த கடைசி அமர்வாகும் அது. பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, 'மக்களே என்னருகே வாருங்கள்" என்றதும் மக்கள்அவர்களை நோக்கி விரைந்து நகர்ந்தனர். பிறகு 'அம்மா பஃது' எனக் கூறினார்கள். அதன் பின்னர் 'மற்ற மக்கள் பெருகும்போது, இது அன்ஸார்கள் எண்ணிக்கையில் குறைவார்கள். முஹம்மதுடைய சமுதாயத்தவர்களில் பொறுப்புக்கு வருகிறவர் யாருக்காவது நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற்றால் நல்லவர்களிடமிருந்து (நல்லவதை) ஏற்று அவர்களில் கெட்டவர்களை அலட்சியம் செய்து விடவும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume:1,Book:11.
ஸஹீஹுல் புகாரி 2409. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். "இவையனைத்தையும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்" என்று கூறிவிட்டு இப்னு உமர்(ரலி) மேலும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கும் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பானவர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்" என்றும் கூறினார்கள் என நான் நினைக்கிறேன்.
Volume:2,Book:43.
ReplyDeleteதேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த 3 ஆண்டுகளுக்கு செம்மையாக, குறிப்பாக மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலோடு நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
Thanks brother Aj Mohideen for reminding us through Quran wal sunnah
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உங்கள் நிலையில் நீங்கள் தவறாமல் நீதியும் நேர்மையுமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
ReplyDeleteBy:-
JMMA International General Consultancy & Services.
All kind of documents work. Certificate Attestation.
Ration Card, Voter ID, Job Typing, Forms Creation.
Web Designing. Flight Ticket Booking.
All India Railway Ticket Booking.
Rubber Stamp, Name Badge.
For all other any enquiry, please contact us.
௦௦+91 75 02 71 82 02 / jmmaigcs@gmail.com