நடப்பாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டங்களில் குழுவினர்களாக சவூதி அரேபியா நகருக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கின்றனர். இதில் 100 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் இம்முறை புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று இரவு புனித ஹஜ் பயணத்திற்கு சென்ற அதிரையர்களை அவர்களின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று வழியனுப்பி வைத்தனர். அதே போல் ஹஜ் பயணத்திற்கு பிற ஊர்களிலிருந்து வந்த பயனாளிகளையும் அவரவர்களின் உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.
நம்மவர்களின் ஹஜ்ஜையும் வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஏற்றுகொள்ள அனைவரும் துஆ செய்யுவோம் .........
ReplyDeleteபேணுதல் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களின் மரணம் வரை அவைகள் காப்பாற்ற படவேண்டும் இலையேல் இந்த நவீன உலகில் சக வசதிகளையும் பெற்ற நமக்கு இதுபோன்ற உம்ர மற்றும் ஹஜ் சம்பிரதாயங்கள் ஒரு சுற்றுலா போன்றே கருதப்படும் .
உங்களது ஹஜ் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய எங்களது துஆவும் வாழ்த்துக்களும்
ReplyDeleteஅன்பின் அபூபக்கர் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteதயவு செய்து கமெண்ட் என்ற பெயரில் ஹஜ் செய்யச் செல்பவர்களை கொச்சை படுத்தும் விதமாக கமெண்ட் இட வேண்டாம்.
ஹஜ்ஜுக்கு செல்பவர்களின் மன நிலையை அல்லஹ் மட்டுமே நன்கறிந்தவன். அங்கு உள்ள நிலைகள் சூழல்கள் அனைத்தையும் கடந்து இந்த மாபெரும் வணக்கத்தை செய்து அன்று பிறந்த குழந்தையாக வரவுள்ளவர்களுக்காக துஆ செய்வதே நம் கடமை.