.

Pages

Tuesday, September 16, 2014

அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்டம் அறிவிப்பு !

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..,

வருகின்ற தியாகத் திருநாள் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட விபரப்படி குர்பானித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுக் குர்பானி பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1,250/-

[ தரமான செம்மறி முழு ஆடுகள் உயிரோடு நியாயமான விலையில் தரப்படும். ]

நமது சமுதாயத்தில் ஏழை,எளிய மாணவ,மாணவியருக்கு இலவசக் கல்விக் கட்டணம், பள்ளிச் சீருடை, ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதாந்திர பென்ஷன், இலவச மருத்துவ உதவி என எண்ணற்ற சேவைகளைச் செய்திட குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்துப்படுகிறது.

எனவே, குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் மாட்டுப் பங்குகள் வாங்கியும் குர்பானித் தோல்களை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கியும் உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு தாங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைப்பேசி எண்கள் :

அதிரை பைத்துல்மால் அலுவலகம் (+91) 04373 241690
ஹாஜி ஜனாப். அப்துல் ஹமீது [செயலாளர்] 9952120166
ஹாஜி ஜனாப். முஹம்மது முஹைதீன் 9443448115

சென்ற ஆண்டு அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
நிர்வாகம் - அதிரை பைத்துல்மால்.
அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம் போன் (+91) 04373 241690
ஈமெயில் : abmchq@gmail.com
adiraibaithulmal@yahoo.com

இது குறித்து அதிரை பைத்துல்மால் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நோட்டிஸில் கூறியிருப்பதாவது :

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.