.

Pages

Sunday, September 28, 2014

அதிரையில் முரல் மீன் வரத்து அதிகரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படும்.

அதிரை சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்ததால், ஆழ்கடலில் இருந்த முரல் மீன்கள் கரைக்கு வரத் துவங்கியுள்ளன. மீனவர்களின் வலைகளில் எதிர்பார்த்தபடி அதிகமான மீன்கள் சிக்குகின்றன. பிள்ளை முரல், செல்வ முரல், வாளைய முரல், பாம்பு முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல் என பல வகைகள் உண்டு. பார்ப்பதற்கு பாம்பு போன்றும், கடல் குதிரை போன்றும், இளம் பச்சை நிறத்தில் காணப்படும். வித்தியாசமான சுவை கொண்ட இவற்றை கிராம மக்கள் அதிகளவில் விரும்பி உண்பர். அதிரை கடைத்தெரு மீன் மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்காக அதிகளவில் முரல் மீன்கள் வந்தது. இவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.