முத்துப்பேட்டையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கோர்ட்டு தண்டனை விதித்திருப்பதை கண்டித்து அ.தி.மு.க ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி கோவி.பிரபு தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர் நாசர், பேரவை செயலாளர் அயூப்கான், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குறிஞ்சி, நகர இளைஞரணி செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி துணைத் தலைவர் அப்துல் வகாப், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் தாவூது, முன்னால் பேரூராட்சி கவுன்சிலர் கனேசன், இலக்கிய அணி செயலாளர் தங்கமணி, கூட்டுறவு வங்கி தலைவர் நாராயண சாமி, கிளை செயலாளர் செம்பை இளங்கோ, முன்னால் பேரூராட்சி தலைவர் சேக் தாவூது, நிர்வாகிகள் யானை காலிது, கல்லடிக்கொல்லை செந்தில், சிவராமன், பாலசுப்பிரமணியன், சேக்ஜி, மருது ராஜேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் ரகளையில் ஈடுப்பட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை எறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள் நகரம் முழுவதும் ஊர்வலமாக சென்று ரகளையில் ஈடுப்பட்டு கடைகளை அடைக்க வருப்புறுத்தினர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இதனால் முத்துப்பேட்டையில் மக்கள் நடமாற்றம் இன்றி பதற்றத்துடன் காணப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை முத்துப்பேட்டை
அல் பாத்திஹா
ReplyDelete