.

Pages

Monday, September 15, 2014

பேரூராட்சி தலைவர் - துணைத்தலைவர் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டியுள்ள குளங்களுக்கும், குடிநீர் தேவைக்கும் உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி மற்றும் பம்பிங் மூலம் தண்ணீர் கொண்டு வர தேவைப்படும் மின் இணைப்பு வழங்க கோரியும் இன்று காலை மாவட்ட ஆட்சியரை மக்கள் குறை தீர்ப்பு நாளில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணைத் தலைவர் பிச்சை ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

சந்திப்பின் போது அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், பசூல்கான், முஹம்மது செரிஃப், அபூதாஹிர், அப்துல் லத்திப், சிவக்குமார், உதய குமார், கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், முன்னாள் வார்டு கவுன்சிலர் அபூபக்கர் ஆகியோர் உடன் சென்றனர்.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலர், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.