.

Pages

Saturday, September 27, 2014

தீர்ப்பு எதிரொலி: அதிரையில் கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது 1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் அதிரை பேரூந்து நிலையத்தில் திரண்ட அதிமுக கட்சியினர் திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் சில கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. டேக்ஸி ஸ்டாண்டு பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

அதிரை நகரில் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி கேபிள் சானல்களின் ஒளிப்பரப்பிலும் தடை ஏற்பட்டுள்ளது.











2 comments:

  1. அமெரிக்காவில் மோடி - ஜெயிலில் லேடின்னு சொல்லி கொளுத்தினார்கலாமே!

    பள்ளி மாணவிகளை பஸ்ஸில் எரித்த சொம்புகளுக்கு தூக்கு தண்டனைக்கு எதிராக ஒரு அரசே நின்றது, இப்போ தானே உள்ளே, சபாஷ்! இனி அமைச்சர்கள் மாற்றம் உள்ளே இருந்து தான். ஜெயிலில் மின்தடை இருக்குமான்னு தெரியல.

    கல்லக் குடிக்கொண்ட கருணாநிதி வாழ்கவே ....அடுத்து கருணா குடும்பம் தான் ....ஆனா தீர்ப்பு எப்போ வருமோ?

    உப்பை தின்ற யாரும் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்!

    4 ஆண்டு சிறை தண்டனை......ம்ம்ம் ஓ. ப -க்கு கொண்டாட்டம்தான்.

    ReplyDelete
  2. கட்ச்சிகாரர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் அது கட்சியின் ‎பெயரை கெடுத்து விடும். பார்த்து நடங்க. ‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.