.

Pages

Monday, September 22, 2014

தொக்களிக்காடு ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக வெற்றி !

அதிரை அருகே உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 18-09-2014 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சிவக்குமாரும், தி.மு.க. சார்பில் பாண்டியனும் போட்டியிட்டனர்.

இன்று காலை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை சேர்ந்த சிவக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து வெற்றி பெற்ற சிவக்குமாருக்கு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N. ராமசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலளர் ஜெய பிரகாஷ் நாராயணன், அதிரை மற்றும் தொக்காளிகாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

1 comment:

  1. எதிர்பார்த்தது தான், எல்லா இடங்களிலும் வெற்றி, அதிக ஓட்டு போட்ட மக்களுக்கு தரமான இலவச பொருள் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

    கஷ்டப்படாமல் பரீட்சை எழுதி தேர்வான உங்களுக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.