.

Pages

Sunday, September 21, 2014

கின்னஸில் இடம்பெறவுள்ள சவூதி தேசியக் கொடி!

சவூதி அரேபியாவின் தேசிய தினம் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இதற்கான் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக சவூதி அரேபியா ஜித்தாவில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட தேசியக் கொடி ஏற்றப்படவுள்ளது. இதற்காக தயாராகியுள்ள கொடிக்கம்பத்தின்  உயரம் சுமார் 170 மீட்டர் எனக் கூறப்படுகிறது. மேலும் இதில் ஏற்றப்படவுள்ள சவூதி தேசியக் கொடியின் எடை 570 கிலோ. இதுவே உலகின் அதிக எடையுள்ள தேசியக் கொடியாகும்.

ஜித்தாவின் பிரதானப் பகுதியான கார்னிச் பீச்சிற்கு அருகில்  உள்ள ரவுண்டபோட்டில் இந்த கொடி ஏற்றப்படவுள்ளது.  இந்த தேசியக் கொடிக் கம்பம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

2 comments:

  1. உலகில் இன்று எத்தனையோ முஸ்லிம்கள் தனது அடிப்படை தேவைகளான உணவு உடை இன்றி இருந்துவரும் வேளையில் 'பணத்திமிர்' என்ற மமதையில் அரேபியர்கள் ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்து மக்கள் கவனத்தை தங்களது பக்கம் கவர முயற்சிக்கின்றனர்.

    ஏழ்மை வாழ்க்கையின் உலகின் முன்மாதிரி ரசூல் (ஸல் ) அவர்களின் பெயரோடு அல்லாஹ்வின் மகத்தான நாமம் எழுதப்பட்ட இந்த கொடிக்கு இப்படியொரு பண விரய பெருமை தேவையற்றது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.