.

Pages

Wednesday, September 24, 2014

பட்டுக்கோட்டையில் கவிஞர் கல்யாண சுந்தரம் குறித்து ஆவணப்படம் வெளியீடு !

பட்டுக்கோட்டையில் நேற்று மாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆவணப்படத்தினை இயக்குனர் கே. பாக்கியராஜ் வெளியிட கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் ஜவஹர் பாபு, பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா, நடிகர் ராஜேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் : 
நூவன்னா











2 comments:

  1. கையும் காலும்தான் மிச்சம்.......

    விவசாயிகளின் அவல நிலையை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நாடோடிமன்னன் படத்தில் அன்று சொன்னது இன்றும் மாறவில்லை.

    பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி பண்ண வேண்டியது என்ன மச்சான் ?

    கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்தித்து முன்னேற வேணுமடி.

    இந்த கால விவசாய நண்பர்களுக்கும் இது பொருந்தும். கவிஞர் வாழ்ந்த இருபத்து ஒன்பது வயதில் என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு கருத்து, என்ன ஒரு புரட்சி பாடல்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இவரைப் போலவே கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களும் எத்தனையோ பல ‎பாடல்களை தந்தவர், அந்நாட்களில் இலங்கை வானொலியில் தினமும் ‎ஒலிபரப்பாகி வந்த பாடல்களில் கவிஞர் கா.மு ஷெரீப் அவர்களின் ‎பாடல்களும் இடம்பெற்றன.‎

    கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் காலத்தால் அழியாத கவிதைகளையும், ‎காவியங்களை தந்தவர். திரை உலகம் அவரை மறந்தாலும், சமுதாயம் ‎அவருடைய வயோதிகத்தில் அவரை அரவணைக்க தவறவில்லை, கவி ‎கா.மு.ஷெரீப் அவர்கள் ஒரு சுதந்திர போர் தியாகி. அவருக்கு வழங்க ‎இருந்த தியாகி ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ள ‎மறுத்து விட்டார்.‎

    சலுகைகள் எனது சுதந்திர தாகத்தை தனித்துவிடாது என்று ‎பெருமிதத்துடன் கூறிய பெருந்தகை அவர்.‎

    காதர்ஷா முகம்மது ஷெரீப். = கா.மு.ஷெரீப்.‎

    ‎(நன்றி அப்துர் ரஹ்மான், ரசீது மரைக்காயர்)‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Consumer & Human Rights, Thanjavur District Organizer
    Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.