.

Pages

Sunday, September 21, 2014

அதிரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் நிஜாமுதீன் திருமணம் !

இன்று மாலை அதிரை தரகர் தெரு ( ஆசாத் நகர் ) முகைதீன் ஜும்மா பள்ளியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாமுதீன் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் தஞ்சை பாரூக் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் மற்றும் மாவட்ட - கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவேறியது. ஏராளமானோர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர். வந்திருந்த அனைவரையும் மணமக்கள் வீட்டார் அன்புடன் வரவேற்றனர்.

செய்தி மற்றும் படங்கள் : 
இப்ராஹீம் அலி






1 comment:

  1. வாழ்த்துக்கள்.............. சகோதர் நிஜாம் அவர்களின் திருமண நிகழ்ச்சியை அடிரைநீவ்சில் கண்டதும் நேரில் கலந்து கொண்டது போல் உணர்தேன், இன்று என் உறவினர் திருமணம் பன்றட்டில் நடந்தது அதில் நான் பங்கேற்கும் சூழ்நிலை, உங்கள் இல்லற வாழ்வு சிறக்க வல்ல இறைவனிடம் துவா சிய்வேன்...........ஆமின்.


    அன்புடன்

    மான். ஷேக்
    Human Rights
    Adirampattinam-614701

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.