.

Pages

Saturday, September 20, 2014

அஜ்மானில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் !

துபாய் : அஜ்மான் கல்ஃப் மெடிக்கல் ஹாஸ்பிட்டலில் 19.09.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பொது மருத்துவம், பல், இருதயம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும் நீர்ழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் பரிசோதிக்கப்பட்டன.

இம்முகாமில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, எகிப்து, சூடான், சிரியா, ஐக்கிய அரபு அமீரகம்  உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

கல்ஃப் மெடிக்கல் ஹாஸ்பிட்டல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இம்மருத்துவ முகாம் சிறப்புற நடைபெற உறுதுணையாய் இருந்தனர்.

செய்தி மற்றும் படங்கள்: 
முதுவை ஹிதாயத்




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.