முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான் மகன் பாலசுப்பிரமணியன் (45). விவசாயியான இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர தொண்டர். இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கிள் தனது மனைவி ராதாவுடன் கோவிலூர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக கீழ நம்மங்குறிச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார்.
மங்களுர் சாலை பிரியும் இடம் அருகே பைக்கின் குறுக்கே திடீர் என வழிமறித்து கருப்பு நிற பொலிரோ கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய பத்து பேர் கொண்ட கும்பல் மனைவி ராதாவை கீழே தள்ளி விட்டு பாலசுப்பிரமணியத்தை தலை மற்றும் கைகள் உட்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினார்கள். பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பியது.
இதில் தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த அஜீத் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இரத்த வெள்ளத்தில் சாய்ந்த பாலசுப்பிரமணியத்தை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு டாக்டர் முதலுதவி செய்தார். பின்னர் வெட்டுப்பட்ட பாலசுப்பிரமணியத்தின் நிலைமை மோசமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி சென்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அக்கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இச்சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடன் கைது செய்ய கோரியும் பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200 பேர் முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு 9-மணி முதல் நள்ளிரவு 12 வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி கணபதி, திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி அப்பாசாமி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச்செயலாளர் ராமநாதன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடன் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி கூறியதால் சாலை மறியலை விளக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை முத்துப்பேட்டை போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய பாலமுருகன் பாலகனேஷ் விக்னேஷ் அய்யாறு ஆகிய பேர் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடைய பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி தலைவர் முருகேஷ் மற்றும் சுந்தரமூர்த்தி, தமிழ் வாணன், முருகேசன் மற்றொரு முருகேசன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் நேற்று காலை 10.30 மணிக்கு முத்துப்பேட்டை பழைய பஸ்டான்ட் பகுதியில் முக்கிய குற்றவாளிகளை உடன் கைது செய்ய கோரி மங்கலூர் கிராமமக்கள் ஆண்களும் பெண்களும் சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது முத்துப்பேட்டை டி.எஸ்.பி கணபதி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக சொன்னார். அதற்கு கிராமமக்கள் மறுப்பு தெரிவித்து சாலையில் தொடர்ந்து அமர்ந்து இருந்தனர்;. அதனை தொடர்ந்து போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் ஆத்திரம் அடைந்த போலீசார் கிராமமக்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். தடியடி நடத்தியதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. ஆனாலும் போலீசார் தப்பி ஓடிய மக்களை மடக்கி பிடித்து போலீஸ் வேனில் ஏற்றி ஆண் பெண் உட்பட 85 பேரை கைது செய்தனர் இதனால் மேலும் பதற்றம, பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நன்றி : நக்கீரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.