பட்டுக்கோட்டை ஒன்றியம், அணைக்காடு ஊராட்சித் தலைவர் டி. சுதாதரன் (45). இவர் புதன்கிழமை காலை பட்டுக்கோட்டை பெரிய தெருவில் மணிக்கூண்டு அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்று 2 காசோலைகளைக் கொடுத்து ரூ. 3.99 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் வங்கி வாசலில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் தரையில் கிடந்த மூன்று 10 ரூபாய் நோட்டுகளைக் காட்டி பணத்தை கீழே போட்டு விட்டுச் செல்கிறீர்களே என்று கூறினாராம். அதை எடுக்க சுதாதரன் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது மர்ம நபர் இரு சக்கர வாகனத்திலிருந்த ரூ. 3.99 லட்சம் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாராம்.
இதுகுறித்து சுதாதரன் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : தினமணி
பேங்க் மற்றும் பணபுழக்கம் அதிகமுள்ள இடங்களில் நம்மிடம் பணம் அதிகம் இருக்கும் பட்சத்தில் நம்மில் அறிமுகம் இல்லாதோர் நம்மை திசை திருப்ப முயற்சித்தால் நாம் உஷாராக இருத்தல் நலம் .
ReplyDeleteஅதிகம் வியாபாரம் நடக்கும் பெரிய கடைகள் சிலநேரம் கஸ்டமர்கள் இல்லாது இருக்கும் அதையும் குறிவைத்து கொள்ளைகள் நடக்கும் இதுபோன்ற சூழலில் கல்லாவில் அதிக பணம் இருக்கும் அவற்றை அவ்வபோது எடுத்து மாற்று இடத்தில் பாங்க அல்லது வீட்டில் வைப்பதும் நலம்.
பேங்கில் பணம் எடுக்க செல்லும் பச்சத்தில் உறவினர் அல்லது நன்பர் ஒருவரை உடன் அழைத்து செல்வது நல்லது
ReplyDeleteதமிழநாட்டில் வடநாட்டு பணியாளர்கள், தமிழை அசல் தமிழர்கள்போல் கற்றுக்கொண்டு நம்மோடு கலந்து உறவாடி அதில் பலர் இதுமாதிரி திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவதாக பல ஊடகங்களில் செய்திகள் வந்தது, வந்துகொண்டு இருக்கின்றது.
ReplyDeleteஇதுவும் அவர்களுடைய வேலையாகத்தான் இருக்கும். பொதுமக்கள் பார்த்து நடந்துகொள்வது நல்லது.
அகமது ரிதுவான் சொலவது. உண்மை வெளி மாநிலவத்தவரின் வருகைக்கு பிறகு நமதூரிலும் சுற்று வட்டாரத்தில்ம் இது மாதிடியான நூதன திரிட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெருகிறது. இவர்கள் பஞ்சி மிட்டாய், ஐஸ் வியாபரத்திலிருந்து பேண்ஸி ஸ்டோர் வரை தங்களின் வியபாரபரத்தை தமிழ் நாட்டில் நிறுவி வருகிறார்கள். சேட்டு கடைகளில் நம்மூர் பெண்களை வைத்து அவர்கள் உயிரெழுத்து, ஆயுத எலுத்திலிருந்து உயிமெய் எழுத்து வரை தெரிந்து கொள்கிண்றனர். ;-)
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இது மாதிரி பல சம்பவங்களை குறித்து நான் ஏற்கனவே ஒரு ஆக்கம் எழுதி இருந்தேன், ஆனால் அதை மக்கள் விழிப்புணர்வாக எடுத்துக்கொள்ள வில்லை.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Consumer & Human Rights, Thanjavur District Organizer
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com