பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட தொடக்க விழா ஆண்டிகச்சல்- இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.இளங்கோவன் தலைமையேற்றார் . பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மு.பொக்கிஷம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஆர்.ராமநாதன் வரவேற்றார்.பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் .வட்டாட்சியர் மாணிக்கவள்ளி முகாமினை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் பாரி அழகப்பன், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து " யோகாவும் பக்தியும்" என்ற தலைப்பில் ஆசிரியர் என்.நடராஜன் உரை நிகழ்த்தினார். பள்ளி வளாகத்தை மாணவர்கள் சீரமைத்து, தூய்மைப்படுத்தினர். மகப்பேறு மருத்துவர் வி.செல்வி " பொது சுகாதார விழிப்புணர்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார். " வெள்ளத்தனைய மலர் நீட்டம் " என்ற தலைப்பில் பாவலர் மு.தங்கவேலனார் உரையாற்றினார். உறுப்பு தானம், இரத்த தானம், அனைவருக்கும் கல்வி, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு சம்பந்தமான மாணவர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது. வீரகாளியம்மன் கோயில் சாலை சீரமைப்பு பணியையும் மாணவர்கள் மேற்கொண்டனர். திட்ட அலுவலர் இராமநாதன் நன்றி கூறினார்.
செய்தி மற்றும் படம் :
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.