.

Pages

Wednesday, September 17, 2014

அதிரை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தகராறு ! வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு !!

அதிரை அருகே உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நாளை (18–ந்தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. சார்பில் சிவக்குமாரும், தி.மு.க. சார்பில் பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் தொக்காலிக்காடு ஊராட்சிக்கும் மகிலங்கோட்டை ஊராட்சிக்கும் சமநிலையில் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மகிலங்கோட்டை ஊராட்சி தலைவர் சுப்புமாறன், காலனி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை அ.தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சுப்புராறன் கூறும்போது... 
காலனி பகுதியில் உள்ள ஜெயபால் என்பவரை பார்க்க வந்தோம். அவருக்கு பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. இதனை அ.தி.மு.க.வினர் தவறாக நினைத்து தகராறில் ஈடுபட்டனர் என்றார்.

நன்றி : மாலை மலர் 

1 comment:

  1. சில இடங்களில் தெரு பஞ்சாயத் தலைவர் பதவிக்கு பணம் கொடுத்து தான் பதவிக்கு வருகிறார்கள், அதனால தான் கட்டபஞ்சாயத்து இன்னமும் நடக்குது,

    ஜனநாயகம் செத்து பணநாயகம் வந்தததால் முறையான தேர்தல் நடப்பது இல்லை. மக்கள் எதிர்ப்பார்ப்பது ஓட்டுக்கு பணம், ஆட்சிக்கு வந்தபிறகு இலவசம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ஏன் ?

    இடை தேர்தலை தடை செய்ய வேண்டும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.